பக்கம்:மணி பல்லவம்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னுரை


சென்ற ஆண்டு கோடை விடுமுறையில் யாழ்ப்பாண நண்பர்கள் ஒரு கல்லூரி விழாவிற்கு 'வருக' என்று அழைத்தார்கள். சென்று ஒரு வாரம் தங்கினேன். பல இடங்களைக் கண்டேன். காணும் அதே வேளையில் பல கருத்துக்கள் உள்ளத்து எழுந்தன. அவற்றின் தொகுப்பே இந்நூல்.

தங்கிய நாட்களில் ஒரு நாள் மணிபல்லவத் தீவிற்குச் சென்றோம். அது பற்றிய தனிக் கட்டுரை இதில் இடம் பெற்றுள்ளது. அதன் சிறப்புப் பற்றியே இந்நூலுக்கு அப்பெயர் இட்டேன்.

இறுதியில் கல்லூரி விழாவில் நான் பேசிய கம்பராமாயணத்தை ஒட்டிய 'மங்கையர் இருவர்' என்ற சொற்பொழிவு கட்டுரை வகையில் அமைகின்றது. எனவே, ஒரு கிழமையில் அங்கு யாழ்ப்பாணத்தில் கண்ட, கேட்ட, பேசிய பொருள் பற்றிய சுருக்கமே இந்நூலாகிறது. பயண நுால் பல்கிப் பெருக வேண்டுமெனும் இந்நாளில் அவ்வரிசையில் இந்நூலும் இடம்பெறும் என நினைக்கின்றேன்.

இந்நூல் வெளி வர உதவி புரிந்த அறிஞர் திரு. மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை அவர்களுக்கு என் நன்றி உரியதாக!

தமிழ்க்கலை இல்லம்,
சென்னை-30,
31–8–58
அ. மு. பரமசிவானந்தம்,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்.pdf/4&oldid=1302736" இலிருந்து மீள்விக்கப்பட்டது