பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பருவம் வந்த ஆடவர்க்கும் பெண்டிர்க்கும் ஒவ்வொரு சிற்றூரிலும் தனித்தனியே இளந்தாரிமடம் குமரிமடம் என்னும் தங்கும் இடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஊருக்கு வரும் ஆண், பெண் விருந்தினரும் அங்கே தங்குகின்றனர். தங்குகின்றனர். இதனால் சிறு வீடுகளில், தங்கும் இடப்பற்றாக்குறைப் பிரச்சினை தீர்க்கப் படுகிறது. ஒரே வயதினரான காளையர்கள் சேர்ந்து பழகவும் இரவு ஊர்க்காவல் பணிபுரியவும் சில வேளாண்மை வேலைகளில் ஈடுபடவும் சமுதாயக் கடமைகள் சிலவற்றைச் செய்யவும் இந்த ஏற்பாடு பெரிதும் வாய்ப்பளிக்கின்றது. முதுவர் பேச்சு, தமிழின் கிளை மொழிகளுள் ஒன்றாகும். மலையாள மக்களுடன் வாழ நேர்ந்திருப்பதால் மலையாளச் சொற்கள் சிலவும் மலையாள ஒலியும் இவர்களுடைய பேச்சில் இடம் பெற்றுள. தங்கள் தமிழைப் "பாண்டி நாட்டுப்பேச்சு" என்று இவர்கள் பெருமிதத்துடன் கூறிக்கொள்கின்றனர். இவர்களுடைய பேச்சு மொழியை டாக்டர் எஸ். சக்திவேல் விரிவாக ஆராய்ந்துள்ளார். புலையர் . பழனிமலைத் தொடரில் மரம், இலை, புல் ஆகியவற்றால் வேய்ந்த குடிசைகளில் புலையர் வாழ்கின்றனர்; காய், கிழங்கு, கனி வகைகளையும் வேட்டையாடிக் கிடைத்த இறைச்சியையும் உண்பர். . புலையர்களது தலைவனுக்குக் கணியன் என்று பெயர். புலையர்களிடம் 'குடும்பி, குள்ளன், மல்லன், குடியன்' முதலான பல பிரிவுகள் உள்ளன. இவர்கள் கரக நாச்சி, பூவாடை, பூம்பா பாறைநாதன், மாயாண்டி, கருமலையான் முதலான பல தெய்வங் களைச் சித்திரை மாத முழு நிலவு நாளில் சண்முக மலர், எலுமிச்சம்பழம், மஞ்சள் முதலியன கொண்டு வணங்குகின்றனர்; உயிர்ப்பலியும் செய்கின்றனர். விடியும் நேரம் வரையில் இரவெல்லாம் ஆடிப்பாடி மகிழ்வதில் பெருவிருப்பங் காட்டு கின்றனர். மனமொத்த பின் ஆணும் பெண்ணும் மிக நெருங்கிப் பெற்றோரின் இசைவைப் பெரிதாகக் கருதாது வாழத் தொடங்கு கின்றனர். மணவிழாவில் 'கற்பூரவல்லி' என்னும் மணமுள்ள செடிக்கொத்தொன்று மணமகள் கழுத்தில் அணிவிக்கப்படுகிறது.