பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 'கொய்ட் ரைட், ரொம்பச் சரியாச் சொன்னிர்கள் - நீங்கள் வருவதைக்கூடக் கவனிக்காமல் நான்பாட்டுக்கு அவர்களைக் காக்கா பிடித்துக் கொண்டிருந்தால் இடியட் இல்லாமல் என்னவாம்?' என்று அதை அன்புடன் அங்கீகரித்து, அடக்க ஒடுக்கத்துடன் அவருக்குக் காரின் கதவைத் திறந்துவிட்டான் ஒ.கே. 'இதோ பார், இந்தப் பயல்கள் நம்மை முந்தும்படி நீ விட்டுவிடக் கூடாது - என்ன ஆனாலும் சரி!' என்று அடித்துச் சொல்லி விட்டு, "எதற்கும் நாம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையா இருப்போம்” என்று எண்ணியோ என்னமோ, பின் nட்டுக் கதவைத் திறந்துகொண்டு ஏறி உட்கார்ந்தார்!. ஓ.கே. தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடுவானா? - எடுக்கும்போதே எண்பது மைல் வேகத்தில் சென்றான்! அவனுடன் மற்றப் படாதிபதிகளின் கார்களும் போட்டி யிடவே, பாதசாரிகள் 'செத்தோமா, பிழைத்தோமா' என்று தெரியாமல் கலகலததுச் சிதறினர். இந்தக் காட்சி படாதிபதிகளுக்குப் பலே தமாஷாயிருந்தது - இருக்கத்தானே இருக்கும்? - காட்சி ஆரம்பிக்க இரண்டு மணி நேரம் இருக்குமுன்பே கையில் நாலரையனாவுடன் 'கெளண்ட்'டருக்கருகே கியூ'வில் நிற்பவர்களல்லவா அவர்கள்! ஐந்தாம் அத்தியாயம் பாக்கியசாலி பத்மனாபன்! 6 6 * - - • தரீ நாட் நைன் ஒன்!” 'நாட் போர் எய்ட் ஸிக்ஸ்!' ஸிக்ஸ்ட்டி ஸிக்ஸ் நைன்ட்டி நைன்!'

, f * *

'டு ஒன் பைவ் பைவ்! 'லெவன் நாட் ஸெவன் நாட்!' மாறி மாறி ஒலித்த இந்தக் கார் நம்பர்களையும், மாறி மாறி அடித்த அவற்றின் ஹாரன்களையும் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தாள் குப்பச்சி.