பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 அவன் சிறையிலேயே இருக்கவேண்டியதாயிற்று. நண்பர்கள் அவன் உயிரைக் காப்பாற்ற முயன்றார்கள்.

  • &

•్మ• •్మ ஒருநாள் ஒருவன் சிறைக்கோட்டத்துக்குள் புகுந்தான். அப்போது அதிகாலை நேரம். ஸாக்ரட்டீஸ் அமைதியாய்த் தூங்கிக் கொண் டிருந்தான். அவனைத் தட்டியெழுப்பி, சீக்கிரம், சீக்கிரம் தப்பிப் போய்விடு; அதற்கு வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் நான் செய்திருக்கிறேன்' என்றான் அவன் நண்பனான கிரீட்டோ. ஸ்ாக்ரட்டீஸ் விரும்பியிருந்தால் அப்போது மிக்க எளிதாய்த் தப்பிப் போயிருக்கலாம். ஆனால், அவன் அதை விரும்பவில்லை. 'சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டுமென்று இத்தனை காலம் வரை நான் மக்களுக்கு உபதேசம் செய்து வந்திருக்கிறேன். அப்படியிருக்க, இப்போது மரணத்துக்கு அஞ்சி நானே அதை மீறுவதா? மாட்டேன்!” என்று கண்டிப்பாய்ச் சொல்லி விட்டான். கடைசியில் அந்த நாள் - உலகை விட்டு அவன் பிரியவேண்டிய நாள் வந்தது. நண்பர்களும் உறவினர்களும் அவனைப் பார்ப்பதற் காகக் கூட்டங் கூட்டமாகச் சென்றார்கள். ஸாக்ரட்டீஸ் அனை வருடனும் பேசிக்கொண்டிருந்துவிட்டு விடை பெற்றுக் கொண்டான். ஒரு சில நண்பர்களே எஞ்சியிருந்தனர். மாலை கழிந்து இருட்டும் நேரம். இன்னும் கொஞ்ச நேரமே இருக்கிறது, தண்டனை நிறை வேறுவதற்கு. ஸ்ாக்ரட்டீஸ் எழுந்து போனான்; அமைதியாய்க் குளித்தான், முகமலர்ச்சியுடன் வந்தான் உட்கார்ந்தான். சிறைக் காவலன் கையில் விஷக் கோப்பையுடன் வந்தான், ஸாக்ரட்டீஸிடம் அதை நீட்டி விட்டு, 'ஒ, ஸாக்ரட்டீஸ்! நீ ரொம்பவும் மேலானவன் உத்தமன். ஆயினும் நான் என்ன செய்வது? உத்தரவை நிறைவேற்றியாக வேண்டும்!' என்று புலம்பினான். ஸாக்ரட்டீஸ் புன்னகையுடன் கோப்பையைக் கையில் வாங்கினான்; அதிலிருந்த விஷத்தை அமுதம் பருகுவதுபோலப் பருகினான்.