இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
156 முறையில் விளக்கிக் காட்டியிருக்கின்றனர். இங்ங்னம் உயிராற்றல் உயிரினங்களையும் மனிதனையும் 'இயற்கையில் அமைந்த ஒர் எழுதாத்திட்டப்படி இயற்கையின் பேரெல்லை நோக்கி வளரச் செய்கிறது. தொடக்கக் கால மனிதன் கடவுட் கருத்தைப் படைப்பதற்கு உயிராற்றல் பற்றிய அவன் அனுபவம் பேருதவியாயிருந்தது என்னலாம். ஏனெனில் அவன் ஆற்றலையே உயிராகவும் எல்லா ஆற்றல்களையும் உயிராற்றலாகவும் எண்ணினான். இயற்கையாற்றலில், அல்லது ஆற்றல்களில் அவன் கண்ட - அதாவது கருத்துருவில் படைத்த உயிராற்றல் அல்லது ஆற்றல்களே அவன் கடவுட் கருத்து, அல்லது கடவுட் கருத்துக்கள் ஆயின. - ஏப்ரல் 1955