பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 இடங்களிலிருந்து ஸ்தலத்தின் முக்கியத்தைக் குறித்து, சுவாமி தரிசனம் செய்யவரும் மக்களையும் ஏகதேசமாய்க் காணமுடியும். சிற்சில காலங்களில், ஊரின் காட்சியழகை அனுபவித்துக் கொண்டு கேஸ்" விசாரணை முடிக்கக் கருதும் ஜில்லா மாஜிஸ்ட்ரேட்டுகள் முதலியோர் களும் அங்கே முகாம் போடுவதுண்டு. மற்றக் காலங்களில் சுவாமியும் அம்மனும் தன்னந் தனியாய் ஏகாந்தவாசஞ்செய்து வருவார்கள். ஒருமுறை டி.கே.சி. இந்த ஊருக்குச் சென்று இரண்டொரு தினங்கள் தங்கும்படி நேர்ந்தது. அவர்கள் குடும்பத்தோடும் தவசுப்பிள்ளை முதலானவர்களோடும்தான் போயிருந்தார்கள். வழக்கப்படி அவர்களுக்கு உற்ற துணைவனாகிய கம்பனும், தன் நூல் வடிவில் உடன் சென்றிருந்தான். முதலியார் அவர்கள் செல்லுமிடங் களிலெல்லாம் இலக்கிய விழாவாகவே இருக்கும். வந்திருக்கும் மக்கள் அதில் ஈடுபட்டு இன்புற்றுப் பரவசமாவார்கள். பாபநாசத்திலும் அவ்வாறே நிகழ்ந்தது. அவர்கள் அங்கே வந்திருப்பது தெரிந்த நண்பர்களும், இலக்கிய அறிஞர்களும், சிவபூஜா துரந்தரர்களும், பிறரும் காலையில் ஸ்நானம் செய்து, சுவாமி தரிசனம் பண்ணிவிட்டு, முதலியாரவர்களுடைய ஜாகைக்கு இலக்கிய விருந்துண்ணச் சென்று நெருங்கியிருந்தார்கள். முதலியாரவர்களும் புன்னகை பொலிந்த முகத்தோடும், அன்புததும்பும் சொல்லோடும் வந்தவர்களை வரவேற்று உடனிருந்தனர். சில நேரங்கழித்து இலக்கிய விருந்தளிக்கத் தொடங்கினார்கள். இவ்விருந்துகளை நினைக்கும் பொழுது, பொருந்து கல்வியும் செல்வமும் பூத்தலால் விருந்து மன்றி விளைவன யாவையே என்ற கம்பன் வாக்குத்தான் நம் மனக்கண்முன் தோன்றுகிறது. இங்கு நிகழ்ந்த விழாவினிடையில் மூன்று பேர்கள் நதியில் நீராடி, கோயிலில் சென்று வணங்கி, பின் ஈரவஸ்திரத்தோடு முதலியார் அவர்களின் இருப்பிடம் சென்றனர். இவர்கள் வரும் போது காலை சுமார் 8-மணி இருக்கும். விழாவில் இராமன் வருகையை எதிர்நோக்கிப் பரதன் இருந்தது. அவன் வாராமையால் பரதன் தீப்பாய எண்ணித் தீ வளர்த்தது. அப்பொழுது அனுமான் திடீரென்று குதித்து இராமன் வருகையை உணர்த்தியது, பரதன் உணர்ச்சி மேலீட்டால் பரவசப் பட்டு நிற்கும் நிலை முதலிய நிகழ்ச்சிகள் சவிஸ்தாரமாக நிகழ்ந்து கொண்டிருந்தன. செய்யுட் களைத் தமக்கெனவுரிய முறையிலே பாடி, வந்தவர்களெல்லாம் மெய்ம்மறந்து கேட்டு அனுபவிக்கும்படி டி கே.சி. பொருள் சொல்லி வந்தார்கள் மணி 12 ஆயிற்று இலக்கிய விருந்தளித்து வந்த