170 நோக்கத்தை விருப்பத்தை அனுசரித்து எழுதுவதைத் தவிர வேறு வழியில்லை. பாரதியாரை முன்மாதிரியாகக் கொண்டு எழுத வேண்டுமென்று விரும்பும் கவிஞர்களும், ஏதாவது ஒர் இலட்சியத்தை முன்னிறுத்தி எழுத முயலும் எழுத்தாளர்களும், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுடைய வாழ்க்கைக்கு வழி காட்டும் இலக்கியங்களையே எழுதவேண்டும் என்று எண்ணும் இலக்கிய கர்த்தாக்களும்கூட, காசுக்காகக் காமரசக் கதைகளையும் பொழுது போக்குப் புத்தகங்களையும் எழுதித் தொலைக்க வேண்டிய நிர்ப்பந்தத் தில்தான் இருக்கிறார்கள். இவ்வித அவலநிலை அடியோடு மாற வேண்டுமானால், இலக்கிய ரஸிகர்களின் மனோபாவத்தில் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும். பாரதியார் போன்ற கவிஞர்கள் நம்மிடையே தோன்றவேண்டுமானால், புதுமை இலக்கியங்கள் வெளிவர வேண்டுமானால் இலக்கிய ரஸிகர்களின், வாசக நேயர்களின் பேராதரவு பெரிய அளவில் எழுத்தாளர்களுக்குக் கிடைக்க வேண்டும் கம்பருக்குச் சடையப்ப வள்ளல் கிடைத்தார்; அவருடைய ஆதரவால் கம்பர் ஒர் அற்புதமான காவியத்தை - அமரகாவியத்தைச் செய்ய முடிந்தது. பாரதியாருக்குக்கூடச் சில ஆதரவாளர்கள் அக்காலத்தில் இருந்தார்கள்; அதனால்தான் இந்த அளவுக்காயினும் அவர் தமிழ் இலக்கியத்தில் சில புது முயற்சிகளைச் செய்ய முடிந்தது: புதிய சகாப்தத்தையும் ஏற்படுத்த முடிந்தது. அது போல, இன்றையப் புதுமைக் கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஆதரவாளர்கள் அவசியம் வேண்டும், அதற்குரிய தகதியைப் பெற அவர்களும் முயல வேண்டும் • & - ** *్మ* *్మ* பாரதியாருக்கு அவர் வாழ்ந்த காலத்தை விடப் பிற்காலத்தில்தான் பெரும் பிரசித்தி ஏற்பட்டது. பாரதியன்பர்கள்-முக்கியமாக, கல்கி ஆசிரியர் அவர்கள் முன்னின்று அவருக்குச் சரியான முறையில் ஞாபகச் சின்னம் ஏற்படுத்தினார்கள், அவருடைய குடும்பத்தினருக்குப் பேருதவி புரிந்தார்கள் இந்த முயற்சியைப் பின்பற்றிப் பராதிதாசன், நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, வ.ரா முதலியோருக்கு இலக்கிய ரஸிகர்கள் நிதியுதவி அளித்து மகிழ்ந்தார்கள்; அதைக் கொண்டு கடைசி காலத்திலாவது தங்கள் கஷ்டங்களிலிருந்து அவர்கள் ஒரளவு விடுதலையடைந்தார்கள்.
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/172
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை