176 அதே சமயத்தில் மூன்றாவது வரி வகர மோனை பெறவில்லை. எனினும், பாட்டின் முதல் ஆறு வரிகளில் அமைந்துள்ள தாளலயம், தாள லயத்தோடு ஒட்டிவரும் பாவலயம் நம்மை இந்த மோனை களையெல்லாம் மறக்கச் செய்து விடுகிறது..... - - - - - ஏழாவது வரியில் வரும் எட்டி எடுத்து' என்ற தொடர், தாள லயத்தில் குறைபட்ட போதிலும், நிலாப் பிழம்பைத் தொட்டுத் தடவி வந்து எடுக்க முனையும் பாவையரின் தயக்க பாவம் அந்த வார்த்தைகளில் வெளிப்படுகிறது.... .... 'எட்டி எடுத்து' என்கிற வார்த்தைகளைத் தனித் தனியே நிறுத்திச் சொல்லும் போது, எடுத்துக் கொண்ட கருத்தின் பாவலயம் வெளிப்படுகிறது. அந்த பாவ லயம் வெளிப்படும் அதே சமயத்தில், தாள லயக்குறைவு சமன் செய்யப்படுகிறது.....' இவ்வாறு ஒரு புதிய அளவை அறிமுகம் செய்து வைக்கிறார் அவர். இத்தகைய 'பாவ லயங்'களில் சிக்கிக் குற்றுயிராய்த் துடிக்க, தமிழ் என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை! நமக்குத் தெரிந்தவரை தமிழ் அப்படி ஒரு பாவமும் பண்ணவில்லை. ஆனால் பூரீமான் ரகுநாதன் அவர்கள் தமது பாவ காரியங்களுக்குத் தமிழை உபயோகிக்கும் போதுதான் அந்தோ, பாவம்' என்று சொல்லத் தோன்றுகிறது. இனி அவருடைய உதாரண இலக்கியத்தைப் பார்ப்போம். 'வட்டமுலை மின்னார்' என்று தொடங்கும் இந்தக் கவிதை', பஃறொடை வெண்பாவிற்குரிய யாப்பைச் சிதைத்திருக்கிறது என்பதைத் தவிர, வேறு புதிய யாப்பை - அதாவது, புதிய வடிவத்தைத் தோற்று விக்கவில்லை. அப்படியென்றால் என்ன? - அதனுடைய வடிவம் என்பது வெண்பாவிற்குரிய யாப்பைப் பெற முயன்று, ஏலாத்தனம் மேலிட அந்த யாப்பைச் சிதைத்துக் கொண்டு பிறந்ததாகும். இதை உதாரண பூர்வமாக விளக்கினால், புதுமைப் பித்தனுக்குப் பிறந்ததாகக் கூறப்படும் இந்தக் குழந்தை 'கள்ளக் குழந்தை' என்றே கூறவேண்டும் அதுமட்டுமல்ல; செய்யுட்களின் யாப்பமைதியைச் சிதைத்துக் காதை அறுத்து மூக்கைக் கிழித்து வடுப்படுத்திவிட்டு, 'இது தான் புதுமைப்பித்தனின் புதிய ரூபம்' என்று கூறுகிறார் ரகுநாதன்
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/178
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை