பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 புதுமைப் பொங்கல் டி. வி. சுவாமிநாதன் குளிர்தந்த மார்கழிச் சூழ்நிலை போனதும் குதுகுதுப் பேற்றிடும் தைவந் தமர்ந்தது குளிர்வீசும் சாலையில் குடல்பசிக் கொடுமையால் குமைகின்ற சோதரர் குறைதீர்ந்து போனதோ? தென்திசை சென்றதன் தேரினைச் சூரியன் திருப்பினன் நெற்கதிர் தலைசாய்த் தழைத்தது என்புகள் குத்திடும் ஏழையர் வாழ்விலே எத்தனை தொலைவிலோ பாதை திரும்புதல்! -முன்னெலாம் செந்நெல் குவித்தனர் செம்மண் குழைத்தனர் சேர்ந்தெலாம் உண்டிடும் சிந்தை படைத்தவர் கன்னலாய் வீரம் தித்திக்க ஆடினர் கடைக்கண் பார்வையில் காதல் வழிந்தது ஆவினம் பாலினை அன்பாய்ச் சுரந்தது அருந்திறல் காளைகள் அயரா துழைத்தன -இன்று பார் உயிருக்குப் பதிலாக வைக்கோல் சுமந்திடும் ஒய்யாரக் கன்றினைப் பார்த்ததும் தாய்ப்பசு வயிறெலாம் புண்ணாகி வடிக்கின்ற பாலுயிர் வாடிடும் காளைகள் வட்டிக் கடன்வாங்கி பொங்கல் படைக்கின்ற போலிக் குதுகலம் பொலிவற்ற வாழ்க்கையில் காதல் உலர்ந்தது! -எனவே ஏழ்மையின் பேய்குளிர் போனதும் இங்குநாம் எல்லோரும் ஒன்றெனச் சிந்தை உதித்ததும் பொங்கலைப் போற்றுவோம் அதுவரை முடிவிலாப் போரிடக் கங்கணம் பூணுவோம். இத்தினம்! - ஜனவரி 1955