52 வாங்கிக் கொடுத்தான். அம்மா வேண்டாம் கக்கையா'ன்னு சொன்னா; அவன் கேட்கமாட்டேன்னு சொல்லிட்டான்!” அய்யருக்கு ஒன்றும் புரியவில்லை; தோட்டி வாங்கிக் கொடுத்த பழத்தை ருசி பார்த்துக்கொண்டிருந்த அம்பிப் பயலை வைத்த விழி வாங்காமல் பார்த்தார். 'அவனுக்குத் தெரியாத வித்தியாசம் நமக்கு மட்டும் ஏன் தெரிகிறது?' என்று யோசித்தார். அதற்குள் குஞ்சுமணி அவனைக் கேலிபண்ண ஆரம்பித்துவிட்டான்: 'டேய், அப்போ நீ தோட்டி தோளிலே ஒக்காந்துண்டு வந்தே, இப்போ அவன் வாங்கித் தந்த பழத்தையும் மொசுக்கறே. இனிமே நீ தோட்டிப் பயலேதான்! நாளைக்குக் காலையிலே அவன் வரட்டும்; உன்னைத் துரக்கிண்டு போகச் சொல்றேன், பாரு!' அய்யர் அவனைத் திரும்பிப் பார்த்தார். 'இவனுக்கு வித்தியாசம் தெரிகிறதே! - ஒரு வேளை இதற்குக் காரணம் நாம்தானோ?' என்று நினைத்ததும் சுருக்கென்றது. அதற்குள், 'அப்பா, நம்ம தோட்டி ரொம்ப நல்லவனப்பா! எத்தனை அன்போடு எங்கிட்டே அவன் பேசிக்கிட்டு வந்தான் தெரியுமாப்பா? அன்புக்கு அடைக்கும் தாழ் கிடையவே கிடையாதுன்னு நீகூடச் சொல்லுவியே, அப்பா!' என்றான் அம்பி. சீதாதேவி குறுக்கிட்டு, 'வர வழியெல்லாம் அவன் கஷ்டத்தைச் சொல்லிண்டே வந்தான். நாலுநாளா அவனுக்கு நல்ல ஜூரமாம். ஒரு வாய் ஜலம் கொடுக்கக்கூட துணை கிடையாதாம். ஒத்தைக் கட்டையாம். ஐயோ பாவம், அதைக் கேட்க எனக்கு ரொம்ப சங்கடமாயிருந்தது!’ என்றாள் சீதாதேவி. அய்யர் வாய் திறக்கவில்லை! மறு நாள் காலை கக்கையா வீட்டிற்குள் நுழைந்ததும், 'என்னப்பா, எப்படி இருக்கு உடம்பு?' என்று விசாரித்தார் அய்யர். ‘'தேவலை, சாமி!' என்றான் கக்கையா. - செப்டம்பர் 1954.
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/54
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை