65 ஆட்டியது. நான் மெல்லக் கண்களைத் திறந்து, தன்னைச் சுற்றி ஒளி பரப்பிக் கொண்டிருக்கும் அந்த உருவத்தைப் பார்த்தேன். அதன் கனி இதழ்களில் புன்னகையின் கீறலைக் கண்டேன். 'ஏன் கமல், நான் யார் என்று உனக்குத் தெரியுமோ?’ என்று தன் மழலைச் சொற்களை அது உதிர்த்தது. 'தெரியும்!’ என்றேன் நான். 'யார் சொல்லு, பார்ப்போம்? 'தெரியும் என்றால் விட்டு விடேன்!' 'ஊஹாலம் - அதெல்லாம் முடியாது; சொன்னால்தான் விடுவேன்!' 'என் தேவி, உள்ளத்தில் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் ஜோதி!' 'பொய்! - உன் உள்ளத்தில் நான் இல்லையே, வெளியில் அல்லவா இருக்கிறேன்?' "ஆம், அகமும் புறமும் அது இருக்கும்; உடலிலும் உயிரிலும் கலக்கும்; இருளில் இணங்கும், ஒளியில் விலகும்; விலகிக் கூடும், கூடி விலகும்.' 'அதன் பெயர்? 'காதல்!' 'காதலாவது ஊதலாவது, நான் லுவினா கமல், லுவினா! என்ன, தெரிந்ததா? "ஆமாம், லுவினாதான் என் காதல்; என் காதல்தான் லுவினா!' 'சரிதான், இப்பொழுதுதான் எனக்குத் தெரிந்தது...!" "என்ன தெரிந்தது? 'நீ... நீ... ஒரு சுத்தப் பைத்தியம் என்று தெரிந்தது!’ 'இல்லையென்று யார் சொன்னது? - காதலாகிக் கனிந்து, பேச்சற்று மூச்சற்று, தான் தானாகி, மெளனியாகி எல்லாமாகி நிற்கும் நிலைதான் உன்னைப் போன்றவர்களின் கண்களுக்குப் பைத்தியமாகத் தெரிகிறது!’ 'அடேயப்பா, தலையைச் சுற்றுகிறதே! - சரி, இப்பொழுது நீ எங்கே இருக்கிறாய்? ம-இ-5
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/67
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை