பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/19

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

17



இன்னும் ஒன்று சொல்கிறேன். கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையர் என்ற புலவரும் நண்பர்கள். சோழன் வடக்கிருந்து உண்ணாநோன்பிருந்து சாக இருந்த போது பிசிராந்தையாரும், அவருடன் துணையாக இறக்க முயன்றபோது பிள்ளைப்பேறில்லாத நீங்கள் இறக்கக்கூடாது என்ற அரசன் கூறியவுடன், அவர் தன் இல்லத்திற்குச் சென்று, குழந்தை பிறக்கும் வரை இருந்துவிட்டு, குழந்தை பிறந்ததும் மீண்டும் தேடிச்சென்றார் என்று இலக்கியம் கூறுகிறது. ஆகவே, ஒருவரது வாழ்க்கை திருமணத்திற்கு பிறகே தொடங்குகிறது. குழந்தை பிறந்ததுமே முற்றுப் பெறுகிறது என்ற அடிப் படையில் அவி வாறு அமைந்திருக்கிறது.

திருமணம் செய்து கொள்ளாதவர்களுக்கும் சிறப்பான வாழ்வு அமைகிறதே! அதற்கென்ன சொல்கிறீர்கள்? சிறப்பான வாழ்வு அமைவது போலத் தோன்றலாம். ஆனால், ஆராய்ச்சி செய்த அறிஞர்கள்,"பிரம்மசாரிகளே அதிக விரைவில் இறக்கிறார்கள், அவர்களுக்கு அதிகமான மனநோய்களும், உடல் நோய்களும் இருக்கின்றன." என்று கண்டு பிடித்துக் கூறியிருக்கின்றனரே! அதற்கென்ன சொல்கிறாய்!

எனவே, வாழவந்த ஒரு இளைஞன், பருவத்தே பயிர்செய்' என்பதுபோல, காலத்தே கல்யாணம் செய்து கொண்டு வாழவேண்டும் என்பது இறைவனின் எழுதாக் கட்டளையாகும். இயற்கையின் விருப்பமும் இதுவே தான். நமது மதங்களில் வரும் கதைகளும் நிகழ்ச்சிகளும் உருவங்களும் சடங்குகளும் எல்லாமே, ஆண் பெண்ணை இணைத்தேதான் கூறப்பட்டிருக்கின்றன. கோயில் சிற்பங்களை நீ பார்த்திருக்கலாமே!

- நீங்கள் சொல்வது எனக்குப்புரிகிறது மாமா, ஆனால் நீங்கள் என் நிலைமையையும் மனதையும் புரிந்து கொள்ளவில்ல்ையே? அதுதான் எனக்கு சங்கடமாக

o