பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/22

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

20

மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி


2. திருமணம் என்றால் என்ன?

மேல் மாடிக்கு வந்த இருவரும், பாய் விரித்துப் போட்டு உட்கார்ந்து கொண்டனர். மேலே முழு நிலவு காய்ந்து கொண்டிருந்தது. உலகநாதர் உண்ட அவகாசத்தை விட, எடுத்துக் கொண்ட ஓய்வு நேரம், கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. வாசுவுக்கோ, நிமிடம் யுகமாகக் கழிந்து கொண்டிருந்தது.

ஏன் திருமணம் என்று கேட்டாயே, இப்பொழுது சொல்லட்டுமா என்று சிரித்துக் கொண்டே ஆரம்பித்தார் உலகநாதர்.

ஒரு ஆணும், பெண்ணும் ஒன்று சேர்ந்து, ஓர் ஒப்பற்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஈடுபடுகின்ற நல்ல நோக்கத்தின் அமைப்பே திருமணமாகும்.

எல்லா மதங்களும் இதையேதான் விரும்புகின்றன. போதிக்கின்றன. ஆணும், பெண்ணும் சேர்ந்து, ஒரு புதிய பொலிவான சமுதாயத்தை சமைக்கும் பணியில் ஈடுபடவேண்டும், பாடுபட வேண்டும் என்றே அறிவுறுத்துகின்றன.

திருமணத்தால் என்ன பயன் என்று கேட்கலாம். இருவரும், ஒருவருக்கொருவர், தன்னையே முழுமையாக ஒவ்வொருவரிடமும் ஒப்புவித்துக் கொண்டு, இரு மனமும் ஒரு