பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/82

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

80

மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி



ஆத்திரம் அனைத்தையும் கெடுக்கும் என்பதால் மனைவியை வாட்டி வதைத்துத்தான் புரிய வைக்க வேண்டும் என்பது பொருந்தாத கொள்கையாகும்.

மனைவியை அடித்தால்தான் வழிக்கு வருவாள் என்று அடிக்கடி அடித்துத் துன்புறுத்தித் தன் வழிக்குக் கொண்டு வர முயன்று தோற்றுப்போய், கணவன் என்ற மதிப்பையும் இழந்து, இறுதியில் தன் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையைக் கெடுத்துக்கொண்டவர்களை, எத்தனையோ ஆண்களை நான் பார்த்திருக்கிறேன். கொடிய அடிதடி முறையில் மனைவியை தன் வழிக்குக் கொண்டுவர முயற்சிப்பது இருட்டு அறையில் கறுப்பு பூனையைப் பிடிக்க முயன்றவன் நிலைபோல் ஆகிவிடும்.

ஆகவே, எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும், மனைவியின் மதிப்பும் பெருமையும், உயர்நிலையும் மற்றவர்கள் முன்னால் தாழ்ந்துவிடாமல, தணிந்து போய்விடாமல் இருக்குமாறு, கணவன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.

சமுதாயத்தில் மனைவி பெறுகிற மதிப்பானது. கணவனது செயலால் தான் உண்டாகிறது என்பதால், கணவனின் பழக்க வழக்கம், அன்றாட நடைமுறைகள் சொல், செயல் அத்தனையும் சிறப்பாக, பிறள் போற்றும்படி அமைந்திருக்க வேண்டும் என்பதனையும் கணவன் மறக்காமல் கடைபிடித்தொழுக வேண்டியது கடமையாகும் சிலரது குடும்ப வாழ்க்கையில் அடிக்கடி கசப்பும் வெறுப்பும் மீறி சண்டை சச்சரவு ஏற்படக் காரணம் என்ன மகிழ்ச்சியாக வாழத்தான் மண வாழ்க்கையைத் தேடுகிறோம். மனக் குமைச்சலையும், நமைச்சலையும்