பக்கம்:மனோகரா மு. கருணாநிதி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதனால் தான் 30 சொல்லுகிறேன் அர்த்தராத் திரியில் அந்தப்புரத்தில் பிரவேசிக்கக் கூடாதென்று! மனோ : ராஜப்ரியா ! தெரியுமா சேதி? மனோ ராஜ: தெரிந்துதானே வந்தேன் உன் சேதி! கரா! எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய நேரம். ஏமாந்து விடாதே! இளவரசி கொஞ்ச நேரத்துக்கு முன் உன்னைக் கொல்லவந்த எமன்? விஜ: இருதயம் எனக்கும் இருக்கிறது. நல்ல இருதயம் படைத்தவர்கள் ஒரு முறைதான் தவறு செய்வார்கள் மனோ : விஜயா ! நீ வாழ வேண்டியவள். அதுமட்டுமல்ல என் பாதுகாப்பில் இருக்கிறாய் இதுபோன்ற விப ரீத செய்ல்களை என்னால் அனுமதிக்க முடியாது. விஜ: உயிர் உங்கள் அடிமையல்ல. அது ஆண்டவன் தந்தது. மனோ : அதைப்பற்றிய விளக்கம் நாளை விசாரணை மண் டபத்தில். க (பாண்டியமக்கள் விசாரணை மண்டபம்) ராஜப்பிரியன்: கொலை செய்ய முயன்றார் - தற்கொலை செய்துகொள்ள யத்தனித்தார். மன்னிக்க முடியாத மாபெருங் குற்றங்களைச் செய்திருக்கிறார், ராஜகுமாரி! மக்கள் மன்றத்தின் முன் நிறுத்தப்பட்டிருக்கிறார்! எங்கள் அரசிளங்குமாரரை. எனது ஆருயிர்த் தோழரை. சோழர் குலத் திலகத்தை இந்த மனோ கரனை பிரிக்க முயன்ற யுவராணியின் ஆயுளுக்கே முடிவுகட்ட வேண்டும். அரசிளங்குமாரியாரே ! உங் கள் ஆயுள் முழுவதும் நான் தரும் தண்டனையை அனுபவிக்கத் தயாராயிருங்கள். நாளை மாலை சூரிய அஸ்தமனத்திற்குள் - காளி கோயிலில் வேண்டாம் தண்டனையை ஒருநாள் ஒத்திப்போட நான் விரும்ப வில்லை - பாண்டிய நாட்டு பைங்கொடி விஐயாதேவி சோழநாட்டு சுந்தானை கொலைசெய்ய முயன்ற குற்றத் திற்காக இன்றே - இப்போதே - இதே இடத்திலே- எல்லோர் முன்னிலையிலும் மனோகரனுக்கு மாலையைச் சூட்டி மணாளனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்! -