7 ளிப்போது!......சுவாமி! அரூபம் அதிக நாழி இருக்காதா?. பெரி: இருக்காது - ஆனால் இன்னும் முயன்று பார்க்க லாம். நான் தேடும் மூலிகைகள் கிடைத்துவிட்டால் அருபமாக மட்டுமல்ல, அழியாமலே கூட இருக்க லாம். ஆனால் கேசரிவர்மா! நல்லவர் வாழ இதைப் பயன்படுத்து! கேசரி: நல்லவர் வாழப் பயன்படுத்துவேன்! அதே சம யத்தில் இந்த நாசகாரியின் நரி வேலைகளை அம்பல மாக்குவேன். பாவி! பழிகாரி கணவனுக்கு விஷங் கொடுத்த பத்திரகாளி! உன் விஷத்தால் செத்துவிடவில்லையடி. கேசரி வர்மன்! இருக்கிறான் உயிரோடு! சாகவில்லை - சாகமாட்டான், உன் சதியை வெளிப்படுத்தாமல் ! வஞ்சகி !.....வாய் ஜாலக்காரி! பெரிய : ஹ ஹஹ் கேசரி : குருஜி. டெரி: சிலையப்பா அது! நீகசரி: சிலைதான்! ஏன் செதுக்கினேன் இவளை! சித்திர வதை செய்வதற்கு ஒத்திகை பார்க்க ; வசந்த சேனை! உன் விழியில் வேல் சொருகுவேன் - கூந்தலுக்கு தீ மூட்டுவேன்- கொவ்வை உதடுகள்!.. அவைகளில் கூறிய ஊசிகளைக் குத்துவேன் கண்ணாடிக் கன்னம்! கட்டாரியால் கிழிப்பேன்...காண் பவர் வெறி கொள்ளும் மேனி கண்டம் கண்டமாக வெட்டி எறிவேன்! ஆரம்பமாகிவிட்டதடி, அருபத் தின் அற்புத வேலைகள்!... மாயக்காரி, தொடங்கி விட்டதடி உன் மாஜி கணவனின் பழிவாங்கும் படலம். நடமாடும் பாம்பே!... நாசத்தின் நர்த்தனமே! நய வஞ்சகப் பிசாசே... சிரிக்கும் சிலந்தியே ....... உ
வசந்த சேனையின் சிரிப்புடன் அரண் மனையில் காட்சி ஆரம்பமாகிறது.