பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு

351


என்றும்,

“சொற்பதப் பொருள் இருளறுத் தருளும்
        தூய சோதியை வெண்ணெய் நல்லூரில்
அற்புதப்பழ ஆவணங் காட்டி யடியனா
        வென்னை யாளது கொண்ட, நற்பதத்தை”[1]

என்றும் கூறுவது காண்க.

நம்பி ஆரூராகிய சுந்தரமூர்த்தி நாயனார், பக்திமேலிட்டுத் திருப்பதிகங்களைப் பாடிக்கொண்டு பல திருப்பதிகளுக்குச் சென்று கடவுளை வணங்கினார். பிறகு, திருவாரூருக்குச் சென்று அங்கேயே தங்கியிருந்தார். அப்போது, திருவாரூர் திருக்கோயில் ஆலய வழிபாடு செய்துவந்த உருத்திர கணிகையர் குலத்தில் பிறந்த பரவை நாச்சியார் என்பவரைக் கண்டு அவர்மேல் காதல்கொண்டு அவரை மணஞ் செய்து அவருடன் வாழ்ந்து வந்தார். அக்காலத்தில் கோட் புலிநாயனால் என்னும் அடியார் சுந்தரரைத் தமது ஊராகிய நாட்டியத்தான்குடிக்கு அழைத்துச் சென்று சிறப்புச் செய்தார்.

பின்னர், சுந்தரமூர்த்தி நாயனார், தொண்டை நாட்டில் தலயாத்திரை செய்துகொண்டு திருவொற்றியூருக்கு வந்து அங்கே சில காலம் தங்கியிருந்தார். அப்போது சங்கிலி நாச்சியார் என்பவரைக் கண்டு காதல்கொண்டு, மகிழமரத்தடியில் “உன்னைப் பிரியமாட் டேன்” என்று வாக்களித்து அவரை மணஞ் செய்தார். சிலகாலம் சங்கிலியாருடன் வாழ்ந்திருந்து, மீண்டும் திருவாரூருக்குப் போகப் புறப்பட்டுச் சென்றார். செல்லும் வழியில், சங்கிலியாருக்குக் கொடுத்த வாக்கைத் தவறி அவரைப் பிரிந்து சென்றபடியினால், அவருக்குப் பார்வை மறைந்தது. அப்போது ஒற்றியூர் இறைவனைப் பாடிய பதிகத்தில்,

“வழுக்கி வீழினும் திருப்பெய ரல்லால்
        மற்று நானறியேன் மறுமாற்றம்
ஒழுக்க வென்கணுக் கொருமருந் துரையாய்
        ஒற்றியூ ரெனும் ஊருறை வானே”

  1. 17