136
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3
கோலது செம்மையிற் குரைகடல் வளாகம் மாலையும் காலையும் மகிழ்தூங் கின்று
(பேரெண்)
ஆருயிர்க் கெல்லாம் அமிழ்தின் றமையா நீரினும் இனிதுநின் அருள் அருளும் அலைகடலும் ஆயிரண்டும் ஒக்கும் இருள்கொடிமேற் கொண்டாய் நினக்கு
(சிற்றெண்)
நீரலகம் காத்தோய் நீ
நீலவுலகம் ஈந்தோய் நீ
போரமர் கடந்தோய் நீ
புனையெரிமுன் வேட்டோய் நீ
ஒற்றைவெண் குடைபோய் நீ
கொற்றச்செங் கோலாய் நீ
பாகையந் துறைவனீ
பரியவர் இறைவனீ.
(தனிச்சொல்)
எனவாங்கு
(சுரிதகம்)
பொருகடல் வளாகம் ஒருகுடை நிழற்றி இருபிறப் பாளர்க் கிருநிதி ஈந்து மனமகிழ்ந்து அருள்புரி பெரும்புகழ் அச்சுதர் கோவே! இனையை ஆதலின் பனிமதி தவழும் நந்தி மாமலைச் சிலம்ப நந்திநிற் பரவுதல் நாவலர்க் கரிதே! 5
அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா
(தரவு)
நலங்கிளர் திருமணியும் நன்பொன்னும் குயின்றழகார் இலங்கெயிற் றழலரிமான் எருத்தஞ்சேர் அணையின்மேல் இருபுடையும் இயக்கரசர் இணைக்கவரி எடுத்தெறிய விரிதாமம் துயரரூஉம் வெண்குடைமூன் றுடனிழற்ற வண்டாற்ற நாற்காதம் வகைமாண உயர்ந்தோங்கும் தண்டளிர்ப்பூம் பிண்டிக்கீழ்த் தகைபெறவீற்றிருந்தனையே