பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 3.pdf/234

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

234

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-3


விண்பொரு நெடுங்குடை இயல்தேர் மோரியர் பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த அறையிறந்து அகன்றனர் ஆயினும் எனையதூஉம் நீடலர் வாழி தோழி (அகம் 69:10-13)

அகநானூறு 151ஆம் செய்யுளும் இச்செய்தியையே கூறுகிறது. தலைவன் ஒருவன் தன் மனைவியைத் தனியேவிட்டு அயல்நாட்டுக்குப் பொருள் சம்பாதிக்கச் சென்றான். அவன் திரும்பி வருவதாகச் சொன்ன காலம் வந்தும் அவன் திரும்பி வராதபடியால் அவன் மனைவி கவலையடைந்தாள். அப்போது அவளுடைய தோழி அவளுக்குத் தேறுதல் கூறினாள். நந்த அரசர்கள் சேர்த்து வைத்திருந்த பெருஞ்செல்வம் கிடைப்பதாக இருந்தாலும் அவர் அதிக நாள் வெளியே தங்கமாட்டார். கோசர் தம் பகைவருடைய ஊரை வென்ற காலத்தில் அவர்களுக்குப் பணியாத மோகூரைப் பணியச் செய்வதற்காக அவர்களுக்கு உதவியாக வந்த மோரியர், தங்கள் தேர்கள் போவதற்காக அமைத்த மலைப்பாதையைக் கடந்து வெளிநாட்டுக்குச் சென்ற அவர் (தலைவர்) அதிக காலம் தங்கமாட்டார், விரைவில் வந்து விடுவார்” என்று தோழி கூறினாள். அந்த வாசகம் இது:

நந்தன் வெறுக்கை எய்திலும் மற்றவண் தங்கலர், வாழி தோழி! வெல்கொடித் துணைகால் அன்ன புனைதேர்க் கோசர் தொன்மூதாலத் தரும்பணைப் பொதியில் இன்னிசை முரசங் கடிப்பிகுத் திரங்கத் தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர் பணியா மையிற் பகைதலை வந்த மாகெழு தானை வம்ப மோரியர் புனைதேர் நேமி யுருளிய குறைத்த இலங்குவெள் ளருவிய அறைவா யும்பா ... ... ... ... ... ... ... ... நிரம்பா நீளிடைப் போகி அரம்போழ் அவ்வளை நிலைநெகிழ்த் தோரே! (அகம் 251: 5-20)

அகம் 281ஆம் செய்யுளும் இதே செய்தியைக் கூறுகிறது. அயல்நாடு சென்ற தலைவன் நெடுநாள் சென்றும் திரும்பிவராததற்கு மனக்கவலை