பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/126

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு

125


‘இலங்கிரும் பரப்பின் எறிசுறா நீக்கி

வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர் ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக் கலிகெழு கொற்கை'

(அகம். 350:11-13)

(வலம்புரி – வலம்புரிச் சங்கு. பரதவர் – கடற்கரையில் வசிக்கும் நெய்தல் நிலமக்கள். கடலில் கப்பல் ஓட்டுவதும் முத்து சங்குகளைக் கடலில் முழுகி எடுப்பதும் இவர்கள் தொழில். பணிலம் ஆர்ப்ப - சங்க முழங்க)

கொற்கைக் கடலில் மட்டுமன்று, கடலில் பல இடங்களிலும் கடலிலிருந்து சங்கு எடுக்கப்பட்டது. சங்குகளை (வலம்புரிச் சங்குகள், இடம்புரிச் சங்குகள்) சிறு வாளினால் அறுத்து அரத்தினால் அராவி அழகான வளையல்களைச் செய்தார்கள்.

'வல்லோன்

(நற்றிணை, 77 : 8-9)

வாளரம் பொருத கோணேர் எல்வளை’ வளையல்களில் கொடிகள் பூக்கள் வரிக்கோடுகள் முதலியவை அமைத்து அழகாகச் செய்யப்பட்டன. வளையல் அறுக்கும் தொழில் ஆங்காங்கே நடந்தது. சங்கச் செய்யுள்களில் இத்தொழில் கூறப்படுகின்றது. அரம்போழ் அவ்வளை (ஐங்குறு நூறு, நெய்தல் 106, 'கடற்கோடு அறுத்த அரம்போழ் அவ்வளை' (ஐங்குறு, வளைபத்து 48) 'கோடீர் எல்வளை’ (ஐங்குறு, வளைபத்து) 'கோடீர் இலங்குவளை' (குறும். 31 : 5) (கோடு - சங்கு) சங்குகளை வளையாக அறுத்துத் தொழில் செய்தவர்களுக்கு வேளாப் பார்ப்பான் என்று பெயர்.

'வேளாப் பார்ப்பான் வாள்அரம் துமித்து வளைகளைத் தொழிந்த கொழுந்து'

(அகம், 24: 1-2)

வேளாப் பார்ப்பான் என்பதன் பொருள் வேள்வி செய்யாத பார்ப்பான் என்பது. அதாவது விசுவப் பிராமணர். சங்குகளை வளையாக அறுக்கும் தொழிலும் சங்கு வகைகளை விற்கும் தொழிலும் அக்காலத்தில் சிறப்பாக நடந்தன. முக்கியமான நகரங்களில் சங்கறுக்கும் தொழில் நடந்தது. காவிரிப் பூம்பட்டினத்தில் ஒரு வீதியில் சங்குகளை வளையல்களாக அறுக்கும் தொழில் நடந்தது. 'அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும்' (சிலம்பு 5-47) சோழ நாட்டு வஞ்சிமா நகரத்தில். 'இலங்கரம், பொரூஉம் வெள்வளை போழ்நரோடு இலங்குமணி வினைஞர் இரீஇய மறுகும்'

(LDOMA CLD. 28 : 44-45)