பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

மருத்துவ விஞ்ஞானிகள்



பிரிக்கப்பட்ட பூச்சி இனங்கள் ஒவ்வொன்றையும் கூர்ந்து நோக்கினார். இதனால், பாஸ்டியருக்கு ஏற்பட்ட ஆராய்ச்சி பலன் என்னவென்றால், நோயுள்ள பூச்சிகள் பார்ப்பதற்கு பளபளப்பாகவும், மிக நேர்த்தியாகவும், சுறு சுறுப்பாகவும் அவை செயல் பட்டதைக் கண்டார்.

நோய் இல்லாத பட்டுப் பூச்சிகள் உடல் மேல், சிறுசிறு புள்ளிகள் ஏராளமாகத் தென்பட்டன. அதனால், லூயி பாஸ்டியருக்கு, இந்த இரண்டு விதமான பூச்சிகளின் செயல் பாடுகளது வித்தியாசத்தை விளங்கிக் கொள்ள முடியவில்லை.

விளங்கிக் கொள்ள முடியாததற்கு என்ன காரணம்? இதற்கு முன்பு லூயி பாஸ்டியர் பட்டுப் பூச்சியையே பார்த்தது இல்லை.

அந்தப் பூச்சி இனத்தின் பழக்க வழக்க வரலாறோ; அல்லது, அதன் பயன்பாடுகளோ எதுவும் புரியாது அவருக்கு.

பிரெஞ்சு ஆட்சி, அவர்தான் பட்டுப்பூச்சி நோயை ஆராயத் தகுதியுடையவர் என்று நம்பி, லூயி பாஸ்டியரிடம் அரசு பொறுப்பையே ஒப்படைத்தது.

அவரும், தனது திறமையை மட்டுமே நம்பி அரசு கேட்டுக் கொண்ட பணியை ஆய்வு செய்திட ஏற்றுக் கொண்டார். ஆனால், தான் ஒப்புக் கொண்ட பணியின் அறிவோ அனுபவமோ எள்மூக்களவாவது அவருக்கும் தெரிந்திருக்க வேண்டுமல்லவா?

தனது அறிவு, ஊக்கம், விடாமுயற்சி, ஆராய்ச்சித் திறன், அயராத உழைப்பு போன்றவைகளை நம்பியே லூயி பாஸ்டியர் அந்த அரசு பணித்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார் என்றால், அவற்றின் மேல் அவருக்கிருந்த அசையா நம்பிக்கைதான் காரணமாகும்! அவர் திறமைகள் மீது அவருக்குள்ள சந்தேகமின்மையே ஆகும்.

எனவே, பாஸ்டியர் தனது ஆராய்ச்சிப் பணியைச் சிறிது காலம் நிறுத்தி வைத்துவிட்டு, பட்டுப் பூச்சிகளைப் பற்றித் தனக்கு முன்பு யார்? யார் ஆய்வு செய்து புத்தகங்கள்