பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

105


எழுதியுள்ளனரோ, அவற்றையெல்லாம் வாங்கிப் படித்து, பூச்சி வகைகளது வரலாற்றைத் தெளிவாகவே உணர்ந்தார்.

‘பட்டுப் பூச்சிகளை வளர்ப்பதெப்படி?’ என்ற ஆராய்ச்சி நூல் அவருக்குப் பெரிய உதவியாக அமைந்தது. அதனால், அந்தப் பூச்சிகளை வளர்க்கும் முறைகளை அவர் நன்றாகத் தெரிந்து கொண்டார்.

பட்டுப் பூச்சிகளைப் பற்றிய வரலாறுகளை அவர் புரிந்து கொண்ட பின்பு, மீண்டும் பாஸ்டியர் தனது பூச்சிகள் ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்த ஆரம்பித்தார்.

இந்த நேரத்தில், லூயி பாஸ்டியரின் அருமைத் தந்தையாருக்கு உடல் நலம் சரியில்லை என்ற செய்தி வந்தது. அதனால் அவர், தனது ஆராய்ச்சியை அப்படியே நிறுத்தி வைத்துவிட்டு, தந்தையைப் பார்க்கச் சொந்த ஊரான ஆர்பாய் நகருக்குச் சென்று விட்டார்.

தந்தை இருப்பிடத்திற்கு லூயி செல்வதற்கு முன்பாகவே அவரது அன்புத் தந்தையாரான ஜோசப் பாஸ்டியர் இறந்து விட்டார். பிறகு, இறந்து போன தந்தைக்குரிய இறுதிச் சடங்குகளைப் செய்து, அவர் மீளா சோகத்தில் ஆழ்ந்தார் பாவம் தனது அருமை மகன் லூயி பாஸ்டியர் சிறந்த ஒரு டாக்டராக ஆக வேண்டும் என்பதிலே கடைசி வரை கண்ணும் கருத்துமாக இருந்து உழைத்தவரல்லரா அவரது தந்தையார்?

அதனால், தந்தையின் இழப்பிலே இருந்து மகனால் அவ்வளவு விரைவாக மீள முடியவில்லை. இருந்தாலும், பிறப்பவர் இறப்பது பிறவியின் கடமை என்பதை உணர்ந்து ஓரளவு தனது தந்தை வருத்தத்திலே இருந்து ஒருவாறு மீண்டார். இந்த இக்கட்டான நேரத்தில், லூயி பாஸ்டியருக்கு மற்றுமோர் அதிரடியான அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்தது. என்ன அந்த சம்பவம்?

லூயி பாஸ்டியருடைய மகள் ஒருத்தி, நீண்ட நாட்களாகவே நோயிலிருந்து வந்தார். அந்தப் பெண் அவரது