பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

மருத்துவ விஞ்ஞானிகள்


களாலும், கருப்பசாமி, ஐயனாரப்ப சாமி போன்ற சாமிகளுக்கு மக்கள் மேல் ஏற்பட்ட சீற்றத்தின் காரணம் தெய்வக் குற்றங்கள்தான் என்றார்கள்:

கோயில் பூசாரிகளும், சங்கூதும், பண்டாரங்களும், சலவையாளர்களும். நாவிதர்களும், குறி கூறும் மருளாளர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு வேப்பிலைக் கொத்துக்களை கைகளில் ஆணவக் கம்பீரத்தோடு ஏந்திக் கொண்டு; அவரவர் அறிவுக்கேற்ப, மந்திரிப்பது, விபூதி பிடிப்பது, குலுசம் கட்டுவது, சிலைகளாபிஷேகம் செய்து பொங்கலிடுவது, பேயாடுவது, மருளாடிக் குறி கேட்பது, முடிக்கயிறு போடுவது போன்ற விவகாரங்களிலே ஈடுபட்டு, நோயாளிகளைப் பயங்காட்டி ஏதேதோ காரணங்களைக் கூறி, அவற்றைச் செய்துவிட்டு பணத்தையும் பெற்றுச் சென்று விடுவார்கள்!

இவ்வாறு அவர்களுக்குத் தோன்றியதை எல்லாம் செய்பவர்களுக்கு மருத்துவம் பார்க்கும் அறிவாவது உண்டா என்றால் அதுவுமில்லை. மருத்துவ விஞ்ஞானம் இன்று எவ்வளவோ முன்னேறி வளர்ந்த பிறகும் கூட, இன்றும் நமது மக்கள் தெய்வக் குற்றம், காற்றுக் கருப்பு, பேய், பில்லி சூனியம், வைப்பு போன்ற மாய மந்திர ஏமாற்றுத் தனங்களைத்தான் நம்புகிறார்கள். என்றாலும், மருத்துவமும் பார்த்தாக வேண்டும் என்ற முடிவுக்கும் முன்னேறி வந்திருக்கிறார்கள்.

எனவே, இத்தகைய மூட நம்பிக்கைகளை முறியடித்து, அறியாமைச் சகதியிலே அகோரமாக உழன்று கொண்டிருந்த விகார உள்ளம் படைத்த மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு ஒளியேற்றி வைத்த பெருமை மருத்துவ விஞ்ஞானிகளையே சாரும்,

அந்த மருத்துவ மேதைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையிலே சிறந்து விளங்கினார்கள். அத்தகைய மருத்துவ வித்தகர்களுள் ஒருவர்தான் வில்லியம் ஹார்வி என்பவர்.

அவரைப் பற்றி நாம் தெரிந்துக் கொள்வதற்கு முன்பு, நாம் ஒவ்வொருவரும் நமது உடலில் உள்ள இதயம் என்ற உறுப்பைப்