பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

மருத்துவ விஞ்ஞானிகள்


தனக்கும், ஆசிரியர் பணிபுரிய ஆர்வமிருப்பதாகத் தந்தையிடம் பணிவோடு உரைத்தார்.

ஜோசப் பாஸ்டியர் மாவீரன் நெப்போலியனைப் போல எதையும் சிந்தித்து, திட்டமிட்டுச் செயல் புரியும் பயிற்சி யுடையவரல்லரா? அதனால், மகனை அனுப்பி விட்டு ஜோசப் சிந்திக்கலானார்.

தான் குடியிருந்து தொழில் புரியும் ஆர்பாய் நகரிலே இருந்து - பாரிஸ் மாநகர் முன்னூறு மைல் தூரம் உள்ளது. அங்கே போனால், லூயி கவனமாகக் கல்வியில் முன்னேறுவானா? பணமும் அதிகம் செலவாகுமே!

அதைவிட, தனது ஊருக்கு அருகே உள்ள வெசன்கான் நகருக்குச் சென்று படிக்கலாமே! நாமும் நமது தொழில் விவகாரமாக அடிக்கடி அங்கு செல்ல வேண்டி யிருக்கிறதே! அப்போதெல்லாம் லூயியின் கல்வி நடத்தையைக் கவனிக்க முடியுமே! என்றெல்லாம் ஜோசப் பாஸ்டியர் சிந்தனை செய்தார்.

பாரிஸ் நகருக்கு லூயி பாஸ்டியர் சென்று படிப்பதை தந்தை விரும்பவில்லை. அதனால், மகனுக்குரிய அனுமதியை ஜோசப் வழங்காமல், ‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்றே கூறி வந்தார் லூயியிடம்!

பாரிஸ் நகருக்கு எப்படியாவது என்னை அனுப்புங்கள் தந்தையே, என்று லூயி பல முறைத் தந்தையைக் கேட்டு அலுத்துப் போனார். ஜோசப் மகன் நச்சரிப்பைத் தாங்க முடியாமல் திணறினார்.

அந்தவேளையில், ஜோசப் பாஸ்டியரின் நண்பரான பேர்பையர் என்பவர், பாரீஸ் நகரிலிருந்து தனது சொந்த ஊரான ஆர்பாய் நகருக்கு வந்தார். அவர் பாரிஸ் நகரத்தில் காவல்துறைப் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்தார். லூயி பாஸ்டியரை அவர் சிறுவயது முதலே நன்கு அறிவார்.

பேர்பையர், ஜோசப் பாஸ்டியரைச் சந்தித்தார். அப்போது, பேர்பையரிடம் ஜோசப் பேசும்போது, ‘பேர்பையர், நமது லூயி