பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

மருத்துவ விஞ்ஞானிகள்


காலமாக லூயி செய்து வந்த படிகங்களையே தொடர்ந்து சோதனை செய்து வருபவர்.

இத்தகையதோர் ஆற்றலுடைய பியோட், லூயி பாஸ்டியர் செய்த படிக ஆய்வுகளைக் கண்டு ஆச்சர்யப்பட்டார்; பாராட்டினார்; லுயி வளர்ச்சியில் நாட்டம் கொண்டார் என்றால், அது என்ன சாமான்யமான செயலாகுமா?

இந்த நேரத்தில், லூயி பாஸ்டியரின் அன்பு தாயான ஜுன் எடினட் ரோக்யீ திடீரென்று காலமானார்! இந்த மரணச் செய்தியைக் கேள்விப்பட்டு, மலை குலைந்தாலும் மனம் குலையாத லூயி, ஆர்பாய் நகரம் ஓடினார்.

சவமாகக் கிடந்த தனது அன்னையின் சடலத்தைக் கண்டு லூயி பதறினார்; கதறி அழுதார்; தாயாருக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்த பின்பும்கூட சில மாதங்கள் தந்தை யுடனும், தம்பி தங்கைகளுடனும் தங்கி, அவர்களுக்குரிய ஆறுதல்களைக் கூறினார். பிறகு அவர் பாரீஸ் நகரம் திரும்பினார்.

பிரெஞ்சு அரசு லூயியை, டிஷான் எனும் ஓர் ஊரிலுள்ள சின்னஞ்சிறிய பள்ளியில் ஆசிரியராக நியமனம் செய்தது. இந்த பணி நியமனத்தைக் கண்ட விஞ்ஞானிகள் சிலர், அரசு நியமனத்தை எதிர்த்துக் கண்டனம் தெரிவித்தார்கள்.

விஞ்ஞானிகளது கண்டனத்தை அரசு அலட்சியப்படுத்தி வந்ததால், அந்த அறிவியல் அறிஞர்கள் இடைவிடாமல் அரசை வற்புறுத்தி கண்டனக் கடிதங்களை எழுதி வந்ததைக் கண்ட பிரெஞ்சு அரசு, இறுதியல் லூயியின் அறிவாற்றல்களை முழுமையாக உணர்ந்ததால், அவர் ஸ்டிராஸ்பர்க் என்ற பல்கலைக் கழகத்தில் ஓர் இரசாயனப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்; இதை அறிந்த அந்தக் கண்டனக் கடித விஞ்ஞானிகளான பாலார்டும், பியோட்டும் மற்றும் லூயின் நண்பர்களும் மகிழ்ந்தார்கள்.

லூயி பாஸ்டியர் தனக்காக உழைத்த அறிவு ஜீவிகளுக் கெல்லாம் தனது நன்றியை, வணக்கத்தை நேரிடையாகவும்,