பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

13


கடனாளிகளைச் சமாதானமாக வீட்டு விருந்துக்கு அழைத்து வந்து, உணவில் நஞ்சைக் கலந்து விருந்து வைத்துச் சாகடித்து விடுவார்கள். மருத்துவத்துறை விஞ்ஞானிகளின் அறுவைச் சோதனையிலே அந்தப் பிணங்களின் மூளைப் பகுதிகள், நரம்புகள் அனைத்தும் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்படும். பிறகு ஒரு நாள் இந்தப் பிணம் திருடும் செய்தி இங்கிலாந்து அரசுக்குத் தெரிந்ததும் தண்டனைப் பெறுவார்கள் அந்தத் திருடர்கள்.

திருடர்கள் கொடுத்தப் பிணத்தைப் பெற்ற மருத்துவ விஞ்ஞானிகள், மூளையை அறுவை சிகிச்சை செய்ய ஒரு பிணத்தைப் பயன்படுத்தும்போது, அந்தப் பிணத்தின் இடது கையில் முடக்குவாதம் இருந்ததாம்.

உடனே மருத்துவர்கள் அந்தப் பிணத்தின் தலைக் கபாலத்தைப் பிளந்து பார்த்தார்கள். முடக்கு வாதத்துக்குரிய அடையாளம் மூளையின் வலது பாகத்தில் இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் வியந்து, மூளைப் பகுதிகளை மேலும் ஆராய்ச்சி செய்திட ஆர்வமடைந்து சிந்தித்தார்கள்.

எனவே, மூளை ஆராய்ச்சிகளுக்குத் திருடர்களின் மூளையில் தோன்றிய சிந்தனையால், பினங்களைத் திருடி அவர்கள் பணக்காரர்கள் ஆனாலும், தண்டனைகளை அவர்கள் பெற்றாலும், மூளை ஆராய்ச்சிக்கு திருடர்களும் ஒரு காரணமாக இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

மூளையின் கதை இது. இனி இதயம் சம்பந்தப்பட்ட மருத்துவ விஞ்ஞானிகளின் கதையைப் பார்ப்போம்.

வேழத்தின் இதயம்

இருபத்தைந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உயிர்களின் முக்கிய அம்சம்; மூளையை விட இதயத்துக்கு இருந்திருக்கிறது என்பதை, நாம் அறிகிறோம். ஸ்பெயின் நாட்டின் வடக்கே உள்ள ஒரு குகையில், யானை உருவம் ஒன்றை வரைந்து அதன் நடுவில் சிவப்பு வண்ணத்தில் இதயம் போன்ற ஓர் ஓவியத்தை ஒருவர் வரைந்துள்ளார். ஏன் தெரியுமா?