பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

மருத்துவ விஞ்ஞானிகள்


எண்ணி, அவர்கள் வழிபடும் தெய்வங்களுக்கு வழிபாடு செய்வார்கள்.

எனவே, இந்த நோய் ஆண்டாண்டு தோறும் ஏழை விவசாயிகளை வீடு தேடிவந்து, உறுமி உடுக்கை மேள தாள பறையொளி களுடன் பேயாட்டக் கூத்தாடும் கேழ்வரகுக் கூழைக் குடிக்கும். ஆடு-மாடு மக்களும் அலைவார்கள் - தெருத் தெருவாக!

ஏழை விவசாய மக்கள் இவ்வாறெல்லாம் ஆந்த்ராக்ஸ் நோய் வந்தால்; அவதிகள் பட்டு அலைமோதி அழிவதையும், அலை வதையும் லூயி பாஸ்டியார் கண்டார். இதற்கு நாம் என்ன உதவிகளைச் செய்ய முடியும் இந்த உழவர்களுக்கு, என்று சிந்தித்தார்.

ஆந்த்ராக்ஸ் நோய்க் கிருமிகளைக் கொண்டு வந்து ஆராய்ச்சி நடத்தினார். ஆந்த்ராக்ஸ் கிருமிகள் வேகமாக வளர்வதை லூயி மைக்ரோஸ்கோப் கருவி மூலம் கண்டார்.

அந்தக் கிருமிகள் எந்தெந்த வகையில், வழியில், ஆடு மாடுகள் உடலுக்குள் செல்கின்றன என்பதைச் சோதனை செய்தார். எனவே, ஆந்த்ராக்ஸ் நோயினால் ஆடு, மாடுகள் தாக்கப் படாமலிருப்பதற்கான வழி முறைகளை - லூயி விவரமாகக் கூறினார். ஆனால், அந்த நோயைக் குணப்படுத்த என்ன வழி? அதை அவரால் கூற முடியவில்லை. பல மாதங்கள் இந்த முயற்சியிலே ஈடுபட்டார்.

இறுதியாக, லூயி பாஸ்டியருடைய கடுமையான ஆராய்ச்சி யால் மருந்தொன்றைக் கண்டு பிடித்தார். என்ன மருந்து அது?

அதே ஆந்த்ராக்ஸ் கிருமிகள்தான் அந்த மருந்து என்னடா இது ஆந்த்ராக்ஸ் என்ற கொடிய கால் நடைகள் வியாதிக்கு, அதே ஆந்த்ராக்ஸ் கிருமிகளாக மருந்து? வியப்பல்லவா இது ஆம், ஆந்த்ராக்ஸ் கிருமிகளைத்தான் அந்த நோய்க்குரிய மருந்து என்கிறார் லூயி பாஸ்டியர்! அதெப்படி?

ஆந்த்ராக்ஸ் என்ற நோய் பிடித்த ஆடு, மாடுகளிலே இருந்து, ஆந்த்ராக்ஸ் கிருமிகளை எடுத்தார். அந்தக் கிருமிகளை