பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

மருத்துவ விஞ்ஞானிகள்


சருக்குட்பட்ட அதிகாரிகள் அனைவரும், லூயி பாஸ்டியர் இருக்கும் இடத்தைத் திருக்கோயிலாகக் கருதி தேடி வந்து தரிசனம் செய்தார்கள்.

நாய்க் கடிகளால் வேதனைப் பட்ட நீர்ப் பைத்திய நோயாளிகள், லூயி பாஸ்டியரிடம் சிகிச்சைப் பெற்று, அவரது ஆராய்ச்சி நிரூபணத்துக்குச் சான்றானார்கள்.

அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளிலே இருந்தும், இங்கிலாந்து ஜெர்மனி நாடுகளிலே இருந்தும் பாஸ்டியரிடம் சிகிச்சைப் பெற்று நீர்ப் பைத்திய நோயைக் குணப்படுத்திக் கொண்டு அவரவர் ஊர்களுக்குத் திரும்பிச் சென்றார்கள்.

லூயி பாஸ்டியர், இந்த ரேபியீஸ் நோய் சிகிச்சையை, ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடில்லாமல் அனைவருக்கும் செய்தார். நோய் குணமானவர்கள் லூயி பாஸ்டியரைப் போற்றிப் புகழ்ந்தார்கள். உலகம் முழுவதும் லூயி பாஸ்டியர் புகழ் நாடளாவப் பறந்து கொண்டிருந்தது.

அறிவியல் மேதை லூயி பாஸ்டியர் மறைந்தார்!

மனித குலத்தையும், மற்ற உயிரினங்களையும் நோய்கள் வருத்தித்தான் சாகடிக்கின்றன. அந்த நோய்கள் பல வகைகளாக அமையலாம். அவற்றைக் குணமாக்கிட பல மருந்துகளும் கண்டு பிடித்திருக்கலாம். ஆனால், அவை அனைத்தும் அறிவியல் துறைகளின் வெற்றிகளே என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.

அத்தகைய கொடுமையான வியாதிகளுக்கு மூல காரணம் எது? அதை உலகில் முதன் முதல் கண்டுபிடித்த நாடு ஃபிரான்ஸ் நாடுதான்.