பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

மருத்துவ விஞ்ஞானிகள்


அறிவியல் கலமேறி, இதயத் துறை தந்தை Father of Cardiology என்ற உலகைக் கண்டுபிடித்து மருத்துவத் துறைக்கு வழிகாட்டியாக விளங்கினார்.

இதயம் என்பது ரத்தவிசை அழுத்தமுள்ள இயந்திரம் ழுத்ல்யு என்றார். ரத்தம் எப்போதும் ஒரே திசையில் செல்கிறது; உடலில் ஒடும் ரத்தத்தின் அளவு மாறாத நிலையான அளவு கொண்டது: என்றெல்லாம் இதயம் பற்றியும், ரத்தம் குறித்தும் மேலும் தெளிவான, உண்மையான ஆராய்ச்சிக் கருத்துக்களை கூறியவர்தான் வில்லியம் ஹார்வி என்ற மா மனிதர்.

அவரது கண்டுபிடிப்புக்கு பிறகுதான், மருத்துவ உலகம் இதயம் பற்றிய ஆராய்ச்சிக் கருத்துக்களை மருத்துவ உலகம் காது கொடுத்து கேட்டது என்று டாக்டர் சிவகடாட்சம் என்ற மருத்துவ அறிஞர் தனது ‘ஹார்ட் அட்டாக் முன்னும் - பின்னும்’ என்ற நூலில் கூறுகிறார்.

நுரையீரல் ரத்த ஓட்டம் - அதாவது, சிறிய ரத்த ஓட்டம் என்றும், உடலமைப்பு முழுவதும் சார்ந்த ரத்த ஒட்டம் - பெரிய ரத்த ஓட்டம் என்றும், மனித உடலில் இரண்டு விதமான ரத்த ஓட்டங்கள் உள்ளன என்ற விவரத்தை முதன் முதலாக உலகுக்கு விளக்கிக் கூறியவரே மருத்து விஞ்ஞானி வில்லியம் ஹார்விதான்.

‘இந்த இரண்டு இரத்த ஓட்டங்களும் தனித்தனியானவைகள் இல்லை; இணையான ரத்த ஓட்டங்களும் இல்லை; இரண்டுமே தொடர் ரத்த ஓட்டங்களாகவே இருக்கின்றன’ என்ற கருத்தை மிக நுணுக்கமாக ஆராய்ந்தவரும் வில்லியம் ஹார்விதான்.

இதயம் : ஒரு பம்பிங் ஸ்டேஷன்!

அவ்வாறானால், உடலில் எப்போதும் ரத்த ஓட்டம் நிற்காமல் ஓடிக்கொண்டே இருப்பதற்கு என்ன காரணம்?