பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

மருத்துவ விஞ்ஞானிகள்


அதன் இயக்கத்தால் மனித குலத்துக்கு என்ன நன்மைகள் என்பதையே அறியாதவர்களாக இருந்தன - மக்கள் உலகமும் - மருத்துவ உலகமும்!

இதயம் : ஒரு விமர்சனம்!

இதயத்தை விமரிசனம் செய்தவர்கள் பலர் - பல விதமாக! இதயத்தில் உள்ள ஒரு வித சக்தி உடலின் பல பாகங்களுக்குத் தள்ளப்படுகின்றது என்றார்கள் சிலர். வேறு சிலர் நாம் சுவாசிக்கும்போது நடைபெறுகிறது என்றார்கள். இதயத்திற்கும் - இரத்தத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்று வேறு சிலரும் இதயத்தை விமரிசனம் செய்து கொண்டிருந்தார்கள்.

இவ்வாறாக, இதயத்தைப் பற்றி எவருமே திட்டவட்டமானக் கருத்துக்களைக் கூறமுடியாமல் தவித்தபோது, திணறிய போது தான் - ஹார்வி இதயத்தின் இயக்கத்தைப் பற்றித் தெளிவாக ஆராய்ந்து, உண்மைகளை உணர்ந்து உலகுக்கு உரைத்தார்.

இரத்தக் குழாயில் வால்வுகள் இருப்பதை முதன்முதல் கண்டுபிடித்தவர் ஹார்வியின் ஆசான் பேப்ரிசியஸ் ஆவார். அதற்கு மேலும் அதை ஆராய்ந்தார் அவர் வால்வுகள் ரத்தத்தை இதயத்தை நோக்கிச் செலுத்தும் என்பதையும் அவர் கண்டறிந்தார்.

ஆனால் ஹார்வியோ, இரத்தம் இதயத்தை நோக்கி ஓடச் செய்யுமே ஒழிய, வால்வுகள் இரத்தத்தை அங்கிருந்து வெளியேற விடாது என்பதை அறிவித்தார்.

அதாவது, ஒவ்வொரு ரத்தத் துடிப்புக்கும் தமனிகள் விரிவடைந்து, நாடித் துடிப்பை ஏற்படச் செய்யும் என்றார் ஹார்வி. தமனிகள் யாவும் ரத்தத்தை இதயத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்லுமே தவிர, அதன் உள்ளே விடாது என்பதையும் ஹார்வியே கண்டுபிடித்தார்.

இதயம் ரத்தத்தைத் தள்ளுவதால், ரத்தம் தமனிகள் வழியாக ஒடி உடல் முழுவதும் பரவுகிறது என்பதாகும்.