பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

மருத்துவ விஞ்ஞானிகள்


மன்று, யார் யார் அந்தப் பெருமகனிடம் சிகிச்சைப் பெற்றிட நோயாளிகள் என்று வந்தார்களோ, அவர்களை எல்லாம் கூட ஒட ஒடத் துரத்தியடித்தது.

இங்கிலாந்து நாட்டின் அப்போதைய மன்னராக இருந்த முதலாம் சார்லஸ் ஒருவர்தான், வில்லியம் ஹார்வியிடம் மா மனிதனாகவே நடந்து கொண்டார்.

மனித மனம் படைத்த அந்த மன்னன், மக்களும் - மருத்துவ உலகமும் நாணப்படும் படியாக பரிசுகள் பல வழங்கிப் பாராட்டிப் போற்றினார்: ஹார்வியை அரசு மருத்துவராக மதித்து நடத்தினார். அதற்கும் மேலாக, வில்லியம் ஹார்வியின் அறிவை மதித்து அவரது பெருமைக்கு ஆணி வேராக விளங்கினார்.

சார்லஸ் மன்னன், டியூக் ஆஃப் லெனோக்ஸ் என்பவருடன், வில்லியம் ஹார்வியை ஃபிரான்ஸ், ஸ்பெயின் முதலிய நாடுகளுக்கு அனுப்பி வைத்து, அவருடைய ஆராய்ச்சி அறிவால் விளைந்த நன்மைகளைச் சொற்பொழிவுகள் ஆற்றி அவரது புகழை வளர்க்க மன்னர் உறுதுணையாக இருந்தார்.

வில்லியம் ஹார்வி அந்த நாடுகளுக்குச் சென்றபோது, அங்கே உள்நாட்டுச் சண்டைகள் மலிந்து காணப்பட்டதைக் கண்டு; மீண்டும் இங்கிலாந்து நாட்டுக்கே திரும்பி வந்து விட்டார்.

மன்னன் - மன்னனாக மதித்தான் ஹார்வியை!

மன்னர் தனக்குச் செய்த உதவிகளைக் கண்ட ஹார்வி, மன்னரை மனமுருகப் பாராட்டி மகிழ்ந்தார். ஆனாலும், மன்னன் சார்லஸ் வில்லியம் ஹார்வியை ஒரு மருத்துவ உலகின் மன்னராகவே மதிக்க வைத்தார்.

மன்னன் சார்லஸ் வில்லியம் ஹார்விக்கு கொடுத்த மதிப்பையும் - மரியாதையும் கண்ட மருத்துவ உலகமும், மக்களும், ஹார்வியை பெரிதும் மதித்துப் போற்றி, மரியாதை வழங்கினார்கள்.