பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

49


 அறுவை சிகிச்சை முடிந்ததும் – ஈதர் என்ற ஒரு புதிய மருந்தை அறுவை சிகிச்சைக்கு முன்னும், அறுவை நடந்ததிற்குப் பிறகும் கொடுத்து, நோயாளிகளை நன்றாகத் தூங்க வைத்தார்கள்.

அப்போது இருந்து நோயாளிகளுக்கு ஈதர் மருந்து கொடுப்பது என்ற ஒரு புதிய முறை அமுலுக்கு வந்து பரவ ஆரம்பித்தது.

இந்த ஈதர் முறையால், அறுவை செய்யப்பட்ட நோயாளிகள் அறுவை வலி தெரியாமல், நன்றாகத் தூங்கவும் அந்த முறை பயன்பட்டது.

இருந்தாலும், நோயாளிகள் பழையபடி அறுவை சிகிச்சைக்குப் பிறகு இறக்கும் நிலையும் ஏற்பட்டுக் கொண்டேதான் இருந்தது.

ஜோசப் லிஸ்டர் ஆலோசனைக்கு ஏற்றவாறு மருத்துவ மனைகள் கட்டப்பட்டாலும், நல்ல காற்றோட்ட வசதிகள் இருந்தாலும், மருத்துவ மனைகளை நல்ல முறையில் சுத்தம் செய்து வைக்கப்பட்டிருந்தாலும், திறமையான மருத்துவர்கள் சிகிச்சைகள் செய்திருந்தாலும், அறுவைக்குப் பிறகு மரண மடைவோர் எண்ணிக்கை மேலும் அதிகமாகவே வளர்ந்தது.

என்ன காரணம் இதற்கு? என்று ஜோசப் லிஸ்டர் சிந்தித்தார். அதற்குரிய காரணத்தை அறிந்து கொள்ள மீண்டும் அவர் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இந்தக் காரணத்தை அறிய லண்டன் நகரத்திற்கும், எடின்பரோ நகரத்திற்கும் லிஸ்டர் சென்றார். அங்கேயும் இதே ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு காயங்களைச் சுற்றி வீக்கம் ஏற்படுவதை லிஸ்டர் கண்டார். இந்தக் காயங்களின்மேல் காற்று படாமல் இறுக்கமாகக் கட்டுக்களைக் கட்டியும் அவர் சோதனைச் செய்தார். இதில் ஓரளவு அவருக்கு வெற்றியும் புலப்பட்டது.

அப்போது ஒரு பத்திரிகையில் லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானி பாக்டீரியா என்ற கிருமிகளை ஆராய்ச்சி செய்து