பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

மருத்துவ விஞ்ஞானிகள்



காமன் பள்ளி, கிராமர் பள்ளி மாணவர்கள் ஒன்று சேர்ந்தால், டன்டாஸ் நகரையே சேறும் சகதியுமாகக் கலக்கி வருவார்கள். இறுதியாக இரு பள்ளி மாணவர்களும் மோதிக் கொண்டு ஆசிரியர்கள் மேலே பழிகளைப் போட்டுத் தப்பித்துக் கொள்ளும் வாடிக்கைச் சம்பவங்கள் அங்கே அடிக்கடி நிகழ்ந்து கொண்டே இருப்பது வழக்கமாக இருந்து வந்தது.

இந்த பள்ளிகளிலே ஒரு சிறப்பு என்ன வென்றால், காமன் பள்ளித் தலைமை ஆசிரியரே கிராமர் பள்ளி மாணவர்களை வசை பாட ஏசல் களம் அமைத்துக் கொள்வார், எங்கே தெரியுமா அவரது வியூகம் அமைவது? கிராமர் பள்ளித் தலைமை ஆசிரியர் அறையில்தான் அவரது வசைக் களம் அமையும்! கண்டபடி வாய்க்கு வந்தவாறு வசைக் கணைகளை எய்தான் பின்பு சோர்ந்து தனது அறைக்கு வந்து அமருவார்.

ஆஸ்லரா! அடேயப்பா! மிக மோசமானவன்; குறும்பன்; போக்கிரி, கல் வீச்சாளன், சாக்கடைச் சேற்றை வாரி இறைப்பவன்; பள்ளிப் படிப்புக்கே தகுதியற்றவன்; ஆசிரியர்களிடமே அடிக்கடி மோதுபவன்; அவன் ஒருவனைக் கட்டி மேய்ப்பதை விட, ஆயிரம் பிள்ளைகளை அடக்கிப் பாடம் போதிக்கலாம். அவனுக்கு ஆசிரியனாக இருப்பதைவிட முடி வெட்டியாவது சம்பாதிக்கலாம் என்றெல்லாம் கிராமர் பள்ளி மாணவர்களுன் ஒருவனான ஆஸ்லரை இரு பள்ளி ஆசிரியர்களும் விமரிசனம் செய்வார்கள். அத்தகைய ஒரு மாணவன் ஆஸ்லர் என்பவன்!

ஆஸ்லர் என்ற மாணவனைப் பற்றிய மேற்கண்ட விமரிசனத்தில் ஒரு வார்த்தை கூட மிகையன்று நூற்றுக்கு நூறு அப்படியே உண்மையான விமர்சனங்களாகும்.

வகுப்பறையில் வாத்து மந்தை

ஆஸ்லர் பள்ளியில் படிக்கும்போது மிகப் பெரிய குறும்பராகவே இருப்பார். முரடராகவும், முர்க்கராகவும், பிடிவாதக்காரராகவும், தான் பிடித்த முயலுக்கு முன்றே கால் என்று சாதிப்பவராகவும், இருப்பவர் ஆஸ்லர்! பள்ளி