பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

மருத்துவ விஞ்ஞானிகள்


அவன்தான் என்பதிலே எந்தவித சந்தேகமும் இல்லை என்று அடித்துப் பேசி வாதாடினார்-காமன் பள்ளி ஆசிரியர்.

உடனே ஆஸ்லரை அழைத்தார் கிராமர் பள்ளி ஆசிரியர் ஆஸ்லர் வந்ததும் அவன் அதை நான்தான் செய்தேன் என்று நெஞ்சு நிமிர்ந்துக் கூறினான்.

உடனே காமன் பள்ளி ஆசிரியர், ஆஸ்லர் உங்கள் பள்ளியில் இருக்கும் வரை இரண்டு பள்ளிகளுமே ஒழுங்காக நடைபெறாது. பள்ளியை விட்டு அவனைத் துரத்துங்கள், என்று விடாப் பிடியாக அந்தத் தலைமை ஆசிரியர் வற்புறுத்தினார்.

இருந்தாலும், கிராமர் பள்ளித் தலைமை ஆசிரியை திருமதி பிளைனி என்பவர் அவரை அமைதிப் படுத்தி, இனிமேல் இது போன்ற செயல்கள் நடக்காதபடி நான் பார்த்துக் கொள்கிறேன்; சிறுவன்தானே மன்னித்து விடுங்கள் என்று சமாதான்ம் செய்து அனுப்பி வைத்து விட்டார்.

அதற்குப் பிறகு பிளைனி, ஆஸ்லரையும் மற்ற மாணவர்களையும் அழைத்து, இவ்வாறு மீண்டும் நடக்கக் கூடாது நடந்தால் பள்ளியை விட்டு விலக்கி வீட்டுக்கு அனுப்பி விடுவேன், என்று எச்சரித்து, ஆஸ்லரை வகுப்புக்குள் போகச் சொல்லிவிட்டார்.

குறும்புக்காரன் ஆஸ்லரும், அவனது நண்பர்களும் வகுப்பறைக்குச் சென்று அமர்ந்து கொண்டார்கள்.

சில நாட்களில் மீண்டும் புயல்

காமன் பள்ளியிலும் - கிராமர் பள்ளியிலும் கல்வி பயின்ற மாணவர்களும், ஆசிரியர்களும் ஓரிரு மாதங்கள் எந்தவிதச் சச்சரவோ, சண்டைகளோ, பிணக்குகளோ ஏதுமில்லாமல், ஏதோ ஓர் இணக்கமுடன் இருப்பதைப் போல குழப்பங்களற்ற நிலையைக் படித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு நான் திடீரென்று காமன் பள்ளியிலே புயல் ஒன்று எழுந்தது. அப் புயல் கிராமர் பள்ளியிலும் புகுந்து ஆட்டிப்