பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

69



ஆஸ்லர் ஆராய்ச்சித் திறன் வளர்வதற்குரிய காரணம், மருத்துவத் துறையிலே இருந்த எல்லாவித வசதிகளும் ஆகும்.

ஆஸ்லர் திறமை ஒரு திருப்பு முனை

ஆஸ்லரின் மருத்துவக் கல்லூரி வாழ்க்கை, முன்பிருந்த அவரது கல்வித் துறையைவிட எல்லா வகையிலும் முற்றிலும் மாறுபட்டிருந்தது. பழையக் குறும்புக்கார மாணவான இந்த மருத்துவத் துறை மாணவன் என்று ஆஸ்லரைக் காண்பவர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்தார்கள்? அந்த அளவுக்கு அவரது சுபாவங்கள் எல்லாமே மாறி விட்டன.

எந்த மாணவனுடனும் ஆஸ்லர் சேர்வதில்லை. தனித்தே உண்ணல், தனித்தே உறங்கல், தனித்தே படித்தல், தனித்தே சிந்தித்தல், தனித்தே பொழுது போக்கல் என்ற வகைகளிலே ஆஸ்லர் தனிமையை வளர்த்துக் கொண்டார். இவையே ஒரு பெரிய மனம் மாற்றம்தானே!

மருத்துவம் சம்பந்தப்பட்ட தொடர்பான நூல்களை அவர் படிப்பார்; அதில் கூறப்பட்ட அடிப்படைக் கருத்துக்களோடு உழல்வார்; இவ்வாறு பொறுப்பற்ற பருவத்தில் பொறுப்புடைய மருத்துவச் சிந்தனையாளராகச் சிறந்தார்.

தந்தையார் கண்ட கனவு கொஞ்சம் கொஞ்சமாக நனவாகி வந்தது ஆஸ்லருக்கு. யாராவது அவருடைய பழைய மாணவர்கள் அவரைப் பார்க்க வருவார்களானால், ‘புத்தக நிலையத்திற்குப் போய் பாருங்கள், மாணவர்கள் இல்லாத நேரத்தில் ஆராய்ச்சி சாலைக்குள்ளே சென்று பாருங்கள், மருத்துவ மனைக்குப் போங்கள் - நோயாளிகளிடம் பேசிக் கொண்டிருப்பார் என்று குறிப்பிட்டுச் சொல்லுமளவிற்கு ஆஸ்லர் தன்னை பழக்க வழக்கப்படுத்திக் கொண்டார்.

டாக்டர் பட்டம் பெற்று விட்டார்

கற்ற மருத்துவக் கல்வியும், நோயாளிகளைக் கவனிக்கும் முறையும், மருத்துவத் துறைப் பேராசிரியர்களிடம் பெற்றுக் கொண்ட மருத்துவ அறிவும், ஒவ்வொரு நோய்களது வரலாறும்