பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

மருத்துவ விஞ்ஞானிகள்


குறிப்பாகக் கூறுவதானால் காலரா, அம்மை நோய்கள் தெய்வ கோபத்தால் மனித சமுதாயத்தில் தோன்றி; மக்களைக் கொன்று வருகிறது என்ற நம்பிக்கை இன்றும் தமிழ் நாட்டில் இருந்து வருகிறது.

அந்த தெய்வக் கோபத்தின் சீற்றத்தைத் தணிக்க; ஆடி மாதங்களில் மாரியம்மன் வழிபாடுகளைச் செய்து, கருவாட்டுக் குழம்பையும் கூழ்வகை உணவுகளையும் படையலிட்டு, அம்மன் சடங்குகளையும் பய பக்தியோடு செய்து, ஏழை மக்களுக்கு கூழ் வார்த்தல் என்ற விழாவையே நடத்தி கூத்துக்களையும் வருகின்றோம். இந்த தெய்வக் கோபத் தணிப்பு விழாவைத் தமிழ்நாட்டில் இன்றும் அதிகமான அளவில் நாம் மட்டும்தான் நடத்திக் கொண்டு இருக்கின்றோம்.

அதற்கேற்ப, சித்திரை, வைகாசி, ஆணி, ஆடி மாதங்களான வெப்பம் அதிகமான மாதங்களில், ஈக்கள், கொசுக்கள் கூட்டம்; ஒவ்வொரு அசுத்த இடங்களில் அதிகமாக, கூட்டம், கூட்டமாக மொய்த்துக் கொண்டிருப்பதையும் நம் பார்க்கின்றோம். அந்தக் கூட்டங்களை ஒழிக்க வேப்பம் இலைகளையும், மஞ்சள் நீரில் நனைத்து வீடு முழுவதையும் தெளித்துச் சுத்தப்படுத்து கின்றோம்.

அம்மை நோய், காலரா, எனப்படும் வாந்தி பேதி, மலேரியா காய்ச்சல் போன்ற நோய்கள், சதுப்பு நில விஷக் காற்றின் மூலமும், ஈரக் காற்றின் மூலமும், அசுத்தமான சாக்கடை நீர் நிலைத் தேக்கங்களின் மூலமும் வருகின்ற நோய்கள் தான்் என்று சுகாதாரம் அறிந்த அறிஞர்கள் கூறுகிறார்கள். நாம் அவர்கள் கூற்றை நம்பாததால், அவற்றை எல்லாம் தெய்வக் கோபங்களால் உண்டாகும் நோய்களே என்று நம்பி, ஆயிரக் கணக்கான மக்கள் உயிர்கள் பலியாகிக் கொண்டிருப்பதைக் காண்கின்றோம்.

மலேரியா அறிகுறிகள்

குறிப்பாக, மலேரியா எனும் கடுங்காய்ச்சல் நோய் அறிகுறிகளை மக்கள் உணர்வதில்லை. மலேரியா காய்ச்சல் வந்தால் உடம்பு நடுங்கிக் கொண்டிருக்கும்; உடம்பில் சூடு