பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

மருத்துவ விஞ்ஞானிகள்


கொசுவை அறுத்தார்! சோதனை செய்தார்!
கொடிய மலேரியா நோயை விரட்டினார்!

மனிதன் உறங்கும் போதும், உண்ணும் போதும், நீர் குடிக்கும் போதும், விளையாடும் போதும், குளிக்கும் போதும், மற்றவர்களிடம் உரையாடி மகிழும் போதும் - ரோஸ் மலேரியா நோய் சிந்தனையிலேயே இருப்பார்.

மனம் என்னமோ மலேரியா நோய் ஆராய்ச்சியிலேதான் மிதக்கும், ஆனால் அதே நேரத்தில் பிறர் செயல்களில் ஏதாவது மலேரியா அறிகுறிகள் புலப்படுகின்றனவா? என்பதிலும் தனது மனத்தைச் செலுத்துவார்.

ஒரு நேரத்தில் மருத்துவத் தொழிலையே வெறுத்தவர் அல்லரா ரோஸ்? அப்படிப்பட்டவர்தான் இப்போது ஒரு நிமிடத்தையும் வீணடிக்காமல் எந்த நேரமும் மலேரியா ஒழிப்புக் கவனத்திலேயே ஈடுபட்டார்!

ஒரு நாள், மலோரியா நோயால் தாக்கப்பட்ட தனது நண்பன் ஒருவனைக் கண்டார். அவனுடனேயே தங்கினார். அன்றிரவு அவனுடனே உறங்கினார்; ரோஸ் கொசு வலைக்குள் உறங்கினார்; அவரது நோயாளி நண்பர் கொசு வலை இல்லாமல் துங்கினார்.

இதில் என்ன ஆய்வுக்குரிய பிரச்னை என்றால், இரண்டு பேர்களும், ஒரே அறையில் ஒரே காற்றை சுவாசித்துக் கொண்டே தூங்கினார்கள்; ஒரே உணவு; ஒரே குடிநீர்; இவற்றுடனே இருவரும் அந்த அறையில் தூங்கினார்கள்.

கொசுக் கடியால் மலேரியா நோய்!

என்ன முடிவு உருவானது தெரியுமா? காலையில் ரோஸ் நண்பருக்கு மலேரியா நோய் தோன்றியது. ரோசுக்கு எந்த வித