பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

95



அது சரி, நோயுற்றவரின் உடலில் இருந்து அந்த அணுக்கள் எப்படி கொசுக்களால் எடுக்கப்படுகின்றன. அவை எவ்வாறு நோயுற்றவரின் உடலில் உட்புகுகின்றன என்பது இப்போதும் புதிராகவே புலப்பட்டது.

இந்தப் புதிரை அகற்ற ரோஸ் மீண்டும் முயற்சித்தார். அவருடைய தொடர்பான ஆராய்ச்சி மூலமாக அந்தப் புதிர் விலகியது. எப்படி அகன்றது?

கொசு பரப்பும் : நோய் திரவம்

ஒருவரது இரத்தத்தைக் கொசு உறிஞ்சும்போது, தன் உடலில் இருந்து ஒரு வகைத் திரவத்தை வெளியேற்றுகிறது. பிறகு ரத்தம் உறிஞ்சப் படுகிறது. இப்படிக் கொசு செய்யும் போது, தனது உடலிலுள்ள கிருமிகள், அவர் உடலில் செல்லவும், அவர் திரேகத்தில் உள்ள நோய்க் கிருமிகள் ரத்தத்துடன் கலந்து கொசுவின் உடலில் செல்லவும் செய்கிறது.

இவ்வாறு கொசு செய்வதால்தான், மலேரியா நோய் பரவுகிறது என்பதை, ரோஸ் கண்டு பிடித்து மருத்துவ உலகுக்கு நிரூபணம் செய்து காட்டினார். எனவே, மலேரியா நோயை ஒழிப்பதென்றால், முதலில் அழிக்கப் பட வேண்டியவை கொசுக்கள்தான் என்பதைத் தனது ஆராய்ச்சி மூலமாக அவர் மெய்ப்பித்துக் காட்டுனார்.

மலேரியா கொசுக்கள், சதுப்பு நிலத்திலும், ஈரம் மிகுந்த வேறு இடங்களிலும், சாக்கடை, கால்வாய்கள், குட்டைகள், ஏரி, குளங்கள், ஆறுகளின் முகத்துவாரங்கள், ஆகியவற்றில்தான் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகின்றன.

கொசு, ஒழிய வழிகள் என்ன?

எனவே, உற்பத்தியாகும் இடங்களைச் சுத்தப்படுத்தினால், மலேரியா என்ற நோயே வராது; கொசுக்கள் உற்பத்தி ஆகாது. என்பதைத் தெளிவாக முடிவுகட்டி, அதற்கான காரணங்களையும் விளக்கி, மலேரியா என்ற நோய்க்கு மரணப்படுகுழி தோண்டும் செயற்கரிய செயலைக் கண்டு பிடித்து மருத்துவ உலகுக்கு