இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
108
மருமக்கள்வழி மான்மியம்
பேடியைக் கண்ட பீஷ்மரும்[1] ஆவார்;
430
அண்டமும் கோழி அண்டமாய் விடும்;
உருட்டும் புரட்டும் ஒழிந்து போய்விடும்;
அண்ணன் எதற்கும் அஞ்ச வேண்டாம்;
எதுவந் தாலும் யான்இருக் கின்றேன்;
என்னை,
435
அண்ணன் நன்றாய் அறிய மாட்டீர்,
இந்து லாவில் எழுத்துக்கள் இத்தனை,
மகம்மத லாவில் வரிகள் இத்தனை
என்று சொல்ல எனக்குத் தெரியும்.
தி. பி. கோ.[2] வைத் திருப்பித் திருப்பிப்
440
பாரா இரவும் பகலும் இல்லை.
சுருக்கி உம்மிடம் சொன்னால் போதுமே!
சட்ட மெனக்குத் தலைகீழாய்த்[3] தெரியும்;
நடைபடி[4] யெல்லாம் நன்றாய் தெரியும்:
இரண்டு கையால் எழுதத் தெரியும்;
445
- ↑ 430. பேடியைக் கண்ட பீஷ்மர்: உத்தம வீரரான பீஷ்மர் பேடிமீது அம்பு தொடுக்கமாட்டார். அவரைப் போரில் ஒருவராலும் வெல்ல முடியாதிருந்த நிலையில் ஒரு பேடியை முன் நிறுத்தி அருச்சுனன் அவரை வென்றான்
என்பது பாரத சரித்திரம். - ↑ 460. தி. பி. கோ. - திருவிதாங்கூர் பீனல் கோட் (குற்ற விசாரணைச் சட்டம்).
- ↑ 443. தலைகீழாய்: மிக நன்றாக என்றும், மாறுபாடாக என்றும் இருபொருள் தொனிக்கும்.
- ↑ 444. நடைபடி: கோர்ட்டு நடவடிக்கை முறைகள் என்றும், கோர்ட்டு வாசல் நடை, அதன் படிகள் என்றும் இருபொருள்.