பக்கம்:மாண்புடைய மங்கையர்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தென்னர் குலப் பழி தீர்த்த

தெய்வ மாதரார்

செந்தமிழ் நா ட் டு அரசர்தம் குடிகளுள் மூவேந்தர் குடியே மூத்த குடி என்பது மூதறிஞர் கருத்து. இதனைப் பொய்யா மொழியாம் திருக்குறள்,

பழங்குடி பண்பில் தலைப்பிரிதல் இல்’

என்னும் தொடரில் வரும் பழங்குடி என்பதற்குப் பரிமேல் அழகர் வரைந்த பேருரையானும் அறிய லாம். அவர் பழங்குடி என்னும் தொடரை விளக் குங்கால் தொன்று தொட்டு வருகின்ற குடி என்ப தோடு நில்லாது, 'சேர சோழ பாண்டியர் என்ருற் போலப் படிைப்புக் காலந்தொடங்கி வந்த குடி’ என விளக்கம் தந்து உரை எழுதியுள்ளார். இம்மூவேந்தர் குடியே சீரிய குடி இமயம் சென்று தன் இலச்சி னையை நிலை நிறுத்தி மீண்ட குடி, புலவர்கள் செந் நாவால் புகழும் குடி. இவற்றுள் பாண்டியர் குடி பழமையினும் பழமையது. பாண்டியர் என்னும் சொல் பண்டையர் என்னும் சொற்றிரிபே என்றும் மொழி நூல் வல்லுநரும் மொழிவர். ஆளுடைய அடிகளாரும் (மாணிக்கவாசகர்),

பாண்டி நாடே பழம்பதி யாகவும்:

என்று கூறியுள்ளார். ஆண்டுத் திருக்கோவில் கொண்டு திகழும் பெருமானத் திருநாவுக்கரசர்,