பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/59

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

.......சிறையிடப்பட்டவனாய் வரம்பெற்ற வலிமையைக்கொண்டு மாவரைக்கும் இழிதொழில் செய்பவனாய் நான் சாவேனாகில் தேவனுக்கென்று சிறப்பான பணிபுரிவேன் என்று இசுரவேலர்களுக்கு அறிவிக்கப்பட்டது ஏன்?அந்த இறை முன்னறிவிப்பின் உண்மைதான் என்ன?அந்த புகழ் மிக்க ஆற்றல் கொத்தடிமை கூட வெறுக்கும் பணியை விலங்குகளுக்குரிய மாவரைக்கும் வேலையைச் செய்யும்படி என்னைத்தள்ளியது ஏன்?பெலித்திலியர்களின் அடிமைத்தளையிலிருந்து இசுரவேலர்களை நான் விடுவிப்பேன் என்றல்லவா முன்னறிந்து உரைக்கப்பட்டது.அந்த விடுதலை வீரனை எங்கே என்று வினவுவீர்களானால்,அவன் குருடாக்கப்பட்டவனாய், பெலித்திலியர்களின் அடிமைத்தளையில் தன்னையே பிணைத்துகொண்டவனாய்,அடிமைகளோடு அடிமையாய்க் காசாவிலே மாவரைத்துக்கொண்டிருப்பதைக் காண்பீர்கள்.ஆனால் இப்படி வருமுன் உரைப்பதை அய்யப்படுவது எனக்குகந்ததன்று.என்னுடைய தவறுகளால் தான் அவை நிறைவேறாமல் போயின.வலிமை வரம் பெற்றும் அதன் கமுக்கத்தைக் காப்பாற்றமுடியாமல் ஒரு பெண்ணிடம் வெளியிட்ட நானே குற்றம் சாட்டப்படவேண்டியவன்.இந்தப்பெரும் துன்பத்திற்கு வேறு யாருமில்லை, நானே பொருப்பு.ஒரு பெண்ணின் கெஞ்சல் என்னை மேற்கொண்டதால் இப்பேரிழப்புக்கு ஆளானேன்.விளைவுகளை எண்ணாமல்,விழிநீருக்குப் பணிந்து என் மனைவி தீலியாளிடம் கமுக்கத்தை மறைக்கமுடியாமல் போனதே காரணம்.அறிவில்லா வீரத்தால் நன்மையேது?அறிவில்லா வீர்ம் கொண்டவன்,பெண்களின் மாய்மாலத்தால் உண்டாகும் அழிவுக்குரியவன்.