பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器 Cao<CCCoQ-CKC-C><C-C'<C-C'<C-Cā60-C-C-K JBBSJSBBSBBS BJSJSBBSJBBSJBBJSJAJSJ ○os○○oo○・○oe○-○eo○-○os○・○oo○-○・e○-○・*○-く ○ae<>○eo○・○ee○-○oo○-○oc○・○ee○・○ss○-○*○-く 下>ao○・○oo○-○ee○-○es<><>s*○・○eo<><>ee○-○es○-く ×os<>○oo<>-○ee○-○oe○-○oe<>-○oo○・○・○-○**○-く >ss○○eo○・○oo○-○ee○-○ee○・○e・○-○os○-○**○・く SABBSJJAAJSBBSBSBBSBBSeeSASJ பொதியம் நாம் இமயம் நாம்! சாகாத வானம்நாம்; வாழ்வைப் பாடும் சங்கீதப் பறவைநாம்; பெருமை வற்றிப் போகாத நெடுங்கடல்நாம்; நிமிர்ந்து நிற்கும் பொதியம்நாம்; இமயம்நாம்; காலத் தீயில் வேகாத பொசுங்காத தத்து வம்நாம்; வெங்கதிர் நாம்; திங்கள்நாம்; அறிவை மாய்க்கும் ஆகாத பழமையினை அகற்றிப் பாயும் அழியாத காவிரிநாம்; கங்கை யும்நாம்! தோள்வீரப் புகழ்வளர்ச்சிச் சரித்தி ரத்தின் தொடக்கம்நாம்; வஞ்சகத்தின் நெஞ்சைக் கீறும் வாள்வீரம் வருணிக்கும் பரணிப் பாட்டின் வடிவம்நாம்; வாகைப்பூ மாலை சூடச் சூள்வீரம் காட்டியதென் பாண்டி மன்னன் சொந்தம்நாம்; நேருக்கு நேராய் மோதும் ஆள்வீரப் போர்மரபை அமைத்துக் காட்டும் அடிப்படைநாம்; வெடிப்படைநாம், இடிப்படைநாம்! 175 ) மீரா கவிதைகள்