பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

களை அந்த அறப்பணியில் ஈடுபடுத்திய அருமையும் பெருமையும் அந்நூலுக்கு உண்டு. நூலகத் துறையைப் பற்றிய புள்ளி விவரங்களையும் செயல்முறைகளையும் இந்நூல் விளக்கமாக எடுத்துரைக்கின்றது. மேலும் இத்துறையில் ஈடுபடுவோர்க்குரிய தொழில் நுணுக்கங்களையும் தெளிவு பட இந்நூல் தெரிவிக்கின்றது. 1890-ஆம் ஆண்டில் வெளிவந்த மூன்றாவது பதிப்பில் நூலாசிரியர் "நான்கு ஆண்டுகட்கு முன்னர் 138 இடங்களில் தான் நூலகச் சட்டம் நிறைவேறியிருந்தது.இன்று 208 இடங்களில் இந்நூலகச் சட்டம் அமுலில் இருக்கிறது” என்று எழுதி உள்ளார். இத்தகைய வளர்ச்சிக்கும் அறிவு மலர்ச்சிக்கும் காரணமாக இருந்தவர் அவரே. அத்தகைய பெரியாருக்கு நூலக உலகம் என்றென்றும் நன்றி பாராட்டும் கடப்பாடுடையது. வளர்ந்து வரும் நூலகத்துறையில் 1892-ஆம் ஆண்டில் மற்றொரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. இந்த மறுமலர்ச்சிக்குச் சேம்சுடப்பிரவுன் என்பவர் தந்தையாவார். புனைப்பெயருடன் இவரால் எழுதப்பட்ட நூலகத்துறை பற்றிய அளவிறந்த கட்டுரைகள் மக்களிடையே அறிவாற்றலையும் விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தின. நூலகத்திற்கு வரும் மக்கள் பிறர் உதவியின்றி உளம் விரும்பிய நூல்களோடு உறவாட வேண்டும் என்னும் உயரிய நோக்கத்தால் விரும்பின படிக்கும் நூலக முறையினை (Open Access System) உருவாக்கியவர் இவரே. கிளார்க் கென்வெல் (பின்சுபரி) நூலகத்தில் முதன் முதலில் இம் முறையினே நடைமுறைக்குக் கொண்டுவந்து வெற்றி பெற்றவரும் இவரே. இம்முறையினால் நூலகத்திற்கு வரும் மக்கள் எவர் உதவியுமின்றித் தாங்கள் விரும்பு-