பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* *

  1. **

அவை கோவிலுக்கு வெளியே இருக்கின்றன. பட்டன் சிலைக்கு அருகே இரண்டு நாய்களின் உருவங்கள் இருக்கின்றன. அவற்றைப் பூச்சி நாய், காட்சி நாய் என்று சொல்லுகிறார்கள். இக்கோவிலின் முன்னுள்ள பாறையில் இக்கோவில் தோன்றிய காலம் 999 ரீ என்று பொறிக்கப்பட்டுள்ளது. இது கொல்லமாண்டு சுமார் 150 வருஷங்களுக்கு முன் இக்கோவில் தோன்றியது 斑岛虾 விளங்குகிறது. மற்றொரு கல்வெட்டு இக்கோவில் சிங்கம்பட்டியாரால் கட்டப்பட்டதென்று கூறுகிறது. இக்கோவில் கட்டுமுன் இக்கோவிலில் உள்ள சிலைகள், இக்கோவில் இருக்கும் இடத்திற்குச் சுமார் நான்கு மைல் கீழேயுள்ள களியமுத்து பட்டவராயன் கோவிலில் இருந்ததாகவும், அது மிகவும் பழைமையான கோவில் எனவும், அதுவே ஆதிப்பட்டவராயன் கோவில் எனவும் கூறுகிறார்கள். இவ்விரண்டு கோவில்களுக்கும் நேர்த்திக்கடனாகச் செருப்புகளைச் சேர்ப்பிக்கிறார்கள். இது கவனத்துக்குரியது. மலையில் பல பகுதிகள் இக்கதையின் நிகழ்ச்சிகளோடு சம்பந்தப்படுத்திப் பெயரிடப்பட்டுள்ளன. கோவிலுக்குக் கிழக்கேயுள்ள இடம் பகக்கிடைவினை என்றழைக்கப்படுகிறது. இங்கேதான் வாலப் பகடையின் பசுக்கிடை இருந்ததாம். இப்பொழுதும் இங்கே பசுக்கிடை இருக்கிறது. கச்சை கட்டி முடுக்கு என்றொரு மலைப்பாதை இருக்கிறது இங்குதான் வன்னியருக்கும் பட்டனுக்கும் சண்டை நடந்ததென்று சொல்லுகிறார்கள். கச்சை கட்டு என்றால் சண்டைக்குத் தயார் செய்தல் என்பது பொருள். "படுகளப் பாறை" என்ற பாறையில்தான் பட்டன் இறந்து விழுந்து ஒடைக்கரையில் உருண்டான் என்று சொல்லுகிறார்கள் "அரசடித்துறை" அல்லது "பூசைத்துறை" என்பது பட்டவராயன், பொம்மக்காவையும் திம்மக்காவையும் பார்க்குமுன் பூசை செய்து கொண்டிருந்த இடமென்று சொல்லப்படுகிறது. இவ்வளவு விவரமாக இடங்கள் கட்டிக் காட்டப்படுகின்றன. சக்கிலியர்களும், தொட்டியர்களும் வாழ்ந்த இடமும் "தொட்டியர் வலசை" என்று கட்டிக்காட்டப்படுகிறது. இவை யாவும் எதனைக் காட்டுகின்றன? இக்கதை உண்மையான கதையென்பதையே வலியுறுத்துகின்றன.