பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மேற்கூறிய, விவரம் இருவரும் கூறியது தேவர்கள் முதற்கால மன்னர்களிடம் படை வீரர்களாக இருந்து நிலத்தொடர்பை இழந்துவிட்டார்கள். பாண்டியராட்சி மறைந்து நாயக்கர் ஆட்சி ஏற்பட்ட பின்னர், அவர்களில் பெரும்பாலோர் பிழைக்க வழியின்றி கூட்டம் கூட்டமாகக் கொள்ளையடிக்கத் தொடங்கினார்கள். திருமலை நாயக்கர் காலத்தில் அழகர்மலைத் திருடர்களை அடக்க "மதுரைவீரன்" உதவினான் என்று மதுரை வீரன் கதை கூறும் "வன்னியன் கதை" "பட்டன் கதை" இவற்றிலும் இவர்கள் கொள்ளையடித்தது கூறப்படுகிறது. இத்தகைய ஒரு கூட்டத்தை உண்டாக்கியது பலவீனமான நிலப்புரபுத்துவமே, அவர்களுக்குத் தொழில் கொடுத்து, நிலம் கொடுத்துப் பிழைக்க வழி செய்ய நிலப்பிரபுத்துவ ஆட்சியால் முடியவில்லை. ஒருசில நிலப்பிரபுக்கள் கொள்ளைக் கூட்டங்களை ஆதரித்து பெரும் பணம் திரட்டினார்கள். நாளாவட்டத்தில் இந்நிலப்பிரபுக்களிடம் இவர்கள் காவல்காரர்களாக அமர்ந்தனர். 5. கடைசியாக உடன் கட்டையேறத் தீப்பாய்வதற்கு சிங்கம்பட்டி அரண்மனையில் தீ கேட்க பட்டனின் மனைவியர் சென்றார்களென்றும், அரசர் தம்மோடு அரண்மனையில் தங்கக் கேட்டுக் கொண்டதாயும், அவர்கள் மறுத்தபின் சிதையடுக்கிபட்டனைத் தகனம் செய்ய ஏற்பாடு செய்ததாகவும் அச்சுப்பாட்டு கூறுகிறது. ஆனால் முத்துப் புலவரும் கப்பிரமணியக் கவிராயரும் இது உண்மையல்ல என்று கூறுகிறார்கள். முத்துப்புலவர், "உடன்கட்டை ஏற யாரிடமும் கேட்க வேண்டாம் பட்டன் இரவில் இறந்தார். பக்கத்திலுள்ள சக்கிலியர் விக்கிரமசிங்கபுரம் போய்த்தகவல் சொன்னார்கள். பசுக்களுக்குடைய கோனார்களும் வேறு உழைப்பாளிகளும் ஓடி வந்தார்கள். பெண்களுக்குக் காணியளிப்பதாகச் சொன்னார்கள். அவர்கள் கேட்கவில்லை உடன் கட்டையேறினார்கள். கப்பிரமணியக் கவிராயர் வேறொரு காரணத்தால் இது நடந்திருக்க முடியாதென்று சொல்லுகிறார். ஏனென்றால் பட்டன் கதை நிகழ்ச்சிகள் நடந்த காலத்தில் சிங்கம்பட்டி ஜமீனே தோன்றவில்லை. முன்னரே இதற்குரிய சான்றுகளை நாம் பார்த்தோம். நீலகண்டன் வாழ்ந்த காலம் பட்டன் இறந்தகாலம். நீலகண்டனைக் கொன்றுதான்