பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிங்கம்பட்டியை நல்லகுட்டி நிறுவினான். அப்படியானால் சிங்கம்பட்டியாரிடம் எப்படிபட்டனது மனைவியர் தீ கேட்டிருக்க முடியும்? கதாபாத்திரங்களின் இயல்புகள் சென்ற பகுதியில் வில்லுப்பாட்டு அச்சுப்பிரதிக்கும், வில்லுப்பாட்டு பரம்பரையாகப் பாடப்பெற்று வருவதற்கும், கர்ண பரம்பரைச் செய்திகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்ந்தோம். கதை நிகழ்ச்சிகளில் மேற்கூறிய இரண்டு மூலங்களிலும் சிற்சில வேறுபாடுகள் இருக்கின்றன என்று காண்போம். முத்துப்புலவர் தற்போது பாடிவரும் பொம்மக்கா, திம்மக்கா வரலாறு புதுப்புனைவு என்பதை அவரே ஒத்துக்கொள்கிறார் என்றும் கண்டோம். பரம்பரையாக அவரது குடும்பத்தில் பாடப்பெற்று வந்த வில்லுப்பாட்டில் கதையின் விறு விறுப்புக்காகவும், கேட்போர் மனதில் உணர்ச்சியைத் துண்டுவதற்காகவும், சிற்சில மாறுதல்கள் அங்கும் இங்கும் செய்யப்பட்டுள்ளன. ஆனால் கதையின் தலைவனான முத்துப்பட்டன் தலைவியரான பொம்மக்காள், திம்மக்காள் மற்றும் இதர கதாபாத்திரங்களான வாலப்பகடை, பட்டனின் சகோதரர்கள், வன்னியர்கள் ஆகியோரின் பண்புகளை மூன்று மூலங்களும் ஒரே விதமாகத்தான் சித்திரிக்கின்றன. இவற்றின் காரணம் என்ன? வில்லுப்பாட்டு உழைக்கும் மக்களின் சிருஷ்டி. கர்ணபரம்பரைச் செய்திகள் உழைக்கும் மக்களிடையே வழங்கி வருவன. அச்சுப் பிரதியும் இவைகளுக்கு முரண்படாத கதைப் போக்கைக் கொண்டுள்ளது. உழைப்பாளி மக்கள் சரித்திா நிகழ்ச்சிகளை எந்தக் கண்ணோட்டத்தோடு கண்டார்களோ, மனித இயல்புகளை எவ்வாறு மதிப்பிட்டார்களோ, அதே அடிப்படையில்தான் இம் கண்று மூலங்களும் மதிப்பிடுகின்றன. ஆகவேதான் கதாபாத்சி or இயல்புகள் மூன்று மூலங்களிலும், ஒன்றுபோல் பெற்றுள்ளன. முத்துப்பட்டன் இயல்பு வில்லுப்பாட்டு முத்துப்பட்டனின் குணநல. மதிப்பிடுகிறது? அவன் சக்கிலியப் பெண்களை மன.