பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 அவனைச் சாதி கெட்ட ன், முறைமை கெடுத்தவன், சண்டாளன் என்று ஏககிறதா ? அல்லது அ. னது மனிதத்துவத்தையும், துணிவையும், உறுதியையும், தியாகத்தையும் போற்றுகிறதா? வில்லுப்பாட்டு அவனது பெரைக் குறிப்பிடும் இடத்தில் எல்லாம் அவனைப் புகழ்ந்து பேசுகிறது. உதாரணமாக "சத்தியவான் முத்துப்பட்டன்", "ஏற்ற ஆரிய முத்துப்பட்டன்," "சோதி முத்து," "பேர் அழகன் முத்துப்பட்டன்", "உத்தம முத்துப்பட்டன்", "சுவாமி முத்துப்பட்டன்" என்றே பேசுகிறது அவ. னை முன்பின் காணாத வாலப்பகடை அவனை முதன் முதலில் க. Tடதும் "இந்திரனோ, தேவனோ, மன்மதனோ, மாயனோ, ரகச் சக் ாதிபனோ?" என்று நினைக்கிறான் வில்லுப்பாட்டு முதலிருந்து கடைசி வரைமுத்துப்பட்டனைப் போற்றியே பேசுகிறது. அவ்வாறு போற்றுவதற்குக் காரணமான இயல் கள் எவை? முதலிலேயே வில்லுப்பாட்டு அவனது கல்வி அறி ைப் பற்றிக் கூறிவிட்டு, அவன் சத்தியவான் என்றும் கூறுகிறது. "சத்த வான்" முத்துப்பட்டன் தமையன்மாரோடு சண்டை செய்து பிறந்த ஊர்தனைக் கடந்து பிற ஊரில் போய்ச் சேர்ந்தான் என்று சொல்லுகிறது. தமையன்மாரோடு முத்துப்பட்டன் ஏன் சண்டை செய்தான் என் 1 காரணம் தெளிவாகக் கூறப்படவில்லை. ஆயினும் சத்தியவான், தமையன்மாரோடு சண்டை செய்வதற்கு என்ன காரணம் என்பதை நாம் யூகித்துக் கொள்ளலாம் அவர்கள் படித்த படிப்பும்,அவர்களுடைய அறிவும் பொய்மையின் சேவைக்குப் பயன்பட்டன போலும்! அதனால்தான் முத்துப்பட்டன் குடும்பத்தை விட்டுக் கொட்டாரக்கரைக்கு வந்து விட்டான் இந்தச் சம்பவம் அவன் உண்மைக்காக உறுதியாக நிற்பான் என்பதை முன்கூட்டிச் சூசகமாக அறிவிக்கிறது. அவனுடைய வாழ்க்கையில் புதிய தடத்தை ஏற்படுத்துவது அவனது காதல் இக்காதல் தொடங்கும் கட்டத்தை வில்லுப்பாட்டு சிறந்த கலை உணர்வோடு கையாளுகிறது. பூஜை செய்துகொண்டு இருந்த பட்டன், பெண்கள் பாடும் ஓசையைக் கேட்டான் சக்கிலிச்சி என்ன பாட்டுப் பாடுவாள்? பாரதி "கூட்டமுதப் பாட்டு" என்று வர்ணித்தாரே, அந்தக் கும்மியா? கண்ணம் இடிக்கும் பாட்டா? பள்ளியர் பாட்டா?