பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 தெம்மாங்கா? எந்தப் பாட்டென்று வில்லுப்பாட்டு சொல்லாவிட்டாலும் அது நிச்சயமாக ஒரு நாட்டுப் பாட்டாகத்தான் இருந்திருக்க வேண்டும் முத்துப்பட்டன் பிராமணன் இதுவரை இம்மாதிரியான பாட்டைக் கேட்டிருப்பானாே என்னவோ? படிப்பள்ளியான அவன் உழைப்பாளி மக்களின் நாடோடிப் பாடலைக் கேட்டு அதில் மனம் பறிகொடுத்தான். முதன் முதலில் உழைப்பாளி மக்களின் கலை அவனது உள்ளத்தைக் கவர்ந்தது பின்னர்தான் உழைப்பாளி வர்க்கப் பெண்கள் அவனது உள்ளத்தைக் கவர்ந்தார்கள் அவனது உள்ளத்தில் தோன்றிய காதல் இன்று பெருகி நாளை வற்றும் காட்டாற்று வெள்ளம் அல்ல வாழ்க்கை முழுதும் நிலைத்திருக்கக்கூடிய, வாழ்க்கையில் எத்தகைய தியாகத்தையும் பெரிதாகக் கருதாத ஆழ்ந்த உணர்ச்சி அது வாலப்பகடை தனது மக்களை "மோசம் செய்ய வந்த பார்ப்பானை, இரண்டு துண்டாக வெட்டுவேன்" என்று கத்தியைக் காட்டிச் சொல்லும்போதும் முத்துப்பட்டன் உயிருக்கு பயப்படவில்லை. தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவும் தயங்கவில்லை. "தாயுடன் கூடப் பிறந்த ஆசை அம்மானே சமர்த்திகளுக்கு ஆசைப்பட்டு ஓடிவந்தேனே பூசை விட்டு பொருள் விட்டு என் மனந்தானே பெண்ணாசைப்பட்ட பாவி நானே தாய் வெறுத்தேன் தமையன் இழந்தேன் உன் மக்களை நான் வெறுத்தால் எந்தன் உயிர் மாண்டிடுந்தானே பேய் பிடித்தானைப் போலாகி விட்டேன் நான் பிழையேன் சக்கிலியா, உன் மக்களை நாலுபேர் அறிய மாலை சூட்டிவைப்பாய் நாளை" இவ்வாறு பட்டன் கோபமாக இருக்கும் வாலப்பகடையிடம் கூறுகிறான். அவனது துணிச்சலையும், மன உறுதியையும் கண்டு வாலப்பகடைக்குக் கோபம் தணிகிறது. இவ்விவாகம் நடைபெறுவதற்கு இடையூறாகவுள்ள க ரணங்களையெல்லாம் வாலப்பகடை முத்துப்பட்டனிடம் எடுத்துக் கூறு கிறான். தங்களுடைய இழிவான வாழ்க்கையைப் பற்றி வருணித்து அது பி. ம்மணனுக்கு ஏற்புடையதாகாது என்று சொல்லுகிறான்.