பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ஆனால் முத்துப்பட்டன் மனம் மாறவில்லை. அவனது மனத்திண்மை தளரவில்லை. அவன் உறுதியாகச் சொல்கிறான். "கோடி கோடி தர்மமுண்டு உனது மக்களை சாதி முறையாகத் தாலி கட்டி வைத்தக்கால், சகல தொழிலும் உங்கள் கூடச் செய்வேன் நான் தாய் மாமன் அல்லவோ இன்று முதலுக்கு, சாதி சனம் போலே நின்று வாரேன் குடிலுக்கு" வாலப்பகடை இத்திருமணத்திற்கு நிபந்தனைகள் விதிக்கிறான் முத்துப்பட்டன் சக்கிலியர்களைப் போலவே உடை தரித்துக் கொள்ள வேண்டும் தோல்வார் இடுப்பில் கட்டிக்கொள்ள வேண்டும். குடுமியைச் சிரைத்துவிட வேண்டும். பூணுலை அறுத்தெறிய வேண்டும். நண்டுக்கறி உண்டு, கள் குடிக்க வேண்டும். தினந்தோறும் ஒரு கோடி செருப்புத் தைத்துக் கொடுக்க வேண்டும். ஆடு மாடு மேய்த்துவர வேண்டும். ត្រៃស நிபந்தனைகளையும் முத்துப்பட்டன் ஒப்புக் கொள்ளுகிறான். தனது குலப்பெருமையின் அடையாளங்களான யூனூலையும், குடுமியையும் நீக்கிவிடுகிறான் கணுக்கால்வரை தாழ்ந்திருக்கும் வேட்டியை முட்டுக்கு மேல் உயர்த்திக் கட்டிக் கொள்ளுகிறான். தனது காதலியருக்காகச் சாதி மேன்மை உணர்வை ஒதுக்கித்தள்ளுகிறான். அது மட்டுமல்ல, இச்செயல்கள், ஏமாற்றும் வெளிப்படைச் சின்னங்களைக் கைவிட்டு அவன் உழைப்பவர் இனத்தில் ஒன்றாக முனைந்து கைவிட்டு அவன் உழைப்பவர் இனத்தில் ஒன்றாக முனைந்து விட்டான் என்பதற்குச் சான்றுகள். இவை வெளிப்படை அடையாளம் மாத்திரமல்ல. அவன் அவர்களுக்கு இடையூறு நேர்ந்தபோது உயிர் விடவும் தயாராகிறான். உடல் நலமின்றி இருந்தும் தனது இனத்தாரின் விரோதிகளை எதிர்த்துத் தன்னந்தனியாகப் போராடி உயிர் நீத்தான். மானிடப் பேருணர்வின் சிகரமாக அவனை உழைப்பாளி மக்கள் போற்றினார்கள். இன்றும் போற்றி வருகிறார்கள். இத்தகைய மானுடத்தின் சிறந்த பிரதிநிதியாக வில்லுப்பாட்டு முத்துப்பட்டனைச் சித்திரிக்கிறது.