பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 செய்வார்கள்; கொம்புச் சாமான்கள் செய்வார்கள். வேலை செய்வதனால் அவர்கள் வீட்டில் அடைபட்டுக் கிடக்க மாட்டார்கள். சேதுராய இளைஞனும் வேட்டையாடச் செல்லும்போது பளிங்க சாதி இளைஞர்களைச் சந்தித்து அளவளாவுவான். அவர்களோடு சேர்ந்து வேட்டையாடுவான். இரவில் ஊருக்கு வெளியே மணமாகாத பளியர் இளைஞர்கள் தங்கும் இளவட்டஞ் சாவடியில் தீக்கணப்பருகே உறங்குவான். அவனும் அவளும் தனிமையில சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டன. அவர்கள் உள்ளங்களில் காதல் அரும்பிற்று. பளியர் சாதியில் விவாக உறவுகள் மிகவும் கண்டிப்பானவை. பெண் வேறு சாதியானோடு பேசியதைக் கண்டலோ வீட்டில் சிறை வைப்பார்கள். தவறு நடந்துவிட்டால் கொன்றே போடுவார்கள். அப்படியிருந்தும் அவள் துணிந்துவிட்டாள். உயிரைவிடக் காதலுக்கு மதிப்பு வைத்தாள். அவனுடைய சாதி நாகரிகம் படைத்த சிறுவிவசாயக் குடும்பம். ஆடுமாடு நிலபுலன் உள்ள குடும்பம். சாதிக்குள்ளேயே பெரிய குடும்பம் என்று சொல்லலாம். அங்கு எவ்வளவு தடைகள் இவ்வுறவுக்கு ஏற்படும் என்பது இளைஞனுக்குத் தெரியாது. அவன் ஊர் திரும்பினான். பெற்றோரிடம் காதல் கொண்ட பெண்ணை மணம் செய்து வைக்கக் கோரினான். அவர்கள் எப்படிக்காட்டுப் பெண்ணை வீட்டிற்குள் அழைத்துக் கொள்ள முடியும்? அவனை வீட்டிற்குள் அடைத்துப் போட்டார்கள். தாங்கள் சொன்ன பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ளாவிட்டால் சொத்துரிமை இல்லை என்றனர். நயத்தாலும், பயத்தாலும் புத்தி சொன்னார்கள். இருமாதங்கள் ஓடின. இவன் வெளிக்கிளம்ப முடியவில்லை. பளிச்சி இரு மாதங்கள் பொறுத்துப் பார்த்தாள். வந்தது வரட்டுமென்று ஒர் உறுதியான முடிவுக்கு வந்தாள். அவளைக் கண்டால் அவன் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையும் அவளுக்கு இருந்தது. அவனது ஊர் நோக்கி வந்தாள். வழியில் கருணையாறு குறுக்கிட்டது. அக்கரையில் காதலனது ஊர் ஆற்றில் வெள்ளம். இக்கரையில் நிலையாக ஒரு பாறைமேல் நின்றாள்; அவன் வரக் காணோம். பெற்றோர் அவளை அக்கரையில் கண்டு மகனை இரட்டைத் தாழ்ப்பாள் போட்டுப் பாதுகாத்தனர். அவன் வரவேயில்லை. அவளும் போகவில்லை நின்றாள்; நின்றாள். நாட்கள், வாரங்கள்